மே 16ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை? RBI அறிவிப்பின் முழு விபரங்கள் இதோ!

0
மே 16ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை? RBI அறிவிப்பின் முழு விபரங்கள் இதோ!
மே 16ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை? RBI அறிவிப்பின் முழு விபரங்கள் இதோ!
மே 16ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை? RBI அறிவிப்பின் முழு விபரங்கள் இதோ!

நாடு முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் வங்கிகளில் மே மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வங்கிகளுக்கு விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பொதுத்துறை வங்கிகள் வழக்கமாக வாரந்தோறும் ஞாயிற்று கிழமை மூடப்படும். அது மட்டுமல்லாமல் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை விடப்படும். மேலும் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றனர். விடுமுறை காலெண்டரின் படி மே மாதத்தில் இந்த வாரம் இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக கலெக்டர் ஆபிசில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்! விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

இருப்பினும் திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி, உத்தரப் பிரதேசம், வங்காளம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மே 16 ஆம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன் படி மே மாதத்திற்கான விடுமுறை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே மே 1 (ஞாயிறு), மே 2 (ஈத்-யுஐ-ஃபித்ரா), மே 3 (பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி/ரம்ஜான்-ஈத்) ஆகிய 5 விடுமுறை நாட்கள் முடிவடைந்துள்ளது. மே 8 (ஞாயிறு), மற்றும் மே 9 (ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்) இன்னும் சில விடுமுறை நாட்கள் இருக்கின்றனர். எனவே பொதுமக்கள் விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல பண பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் தேவையான நேரத்தில் வங்கி சேவைகளை பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!