உங்களது வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட தொகையை மீட்கும் வழிமுறை – RBI அறிவிப்பு!
2017-18 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு சென்றால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பணம் திருட்டு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆன்லைன் திருட்டு அதிகரித்துள்ளது. உங்களது மொபைல் எண்ணிற்கு ஒருவர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி என தெரிவித்து உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை கேட்டறிவார்.
மத்திய அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வர உத்தரவு!
அதன் பின்னர் உங்களது 4 இலக்க ரகசிய எண்ணை தெரிந்து கொண்ட பின்னர் இணைப்பு துண்டிக்கப்படும். பிறகு உங்களது வங்கி கணக்கில் உள்ள தொகை அனைத்தும் திருடப்பட்டு விடும். இவ்வாறு இல்லாமல் சில சமயங்களில் ஆன்லைன் மூலமாக உங்களது வங்கி கணக்கை ஹேக் செய்து ஆன்லைன் மூலமாக பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும்.
2017-18 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, வங்கிகளின் அலட்சியம் மூலமாக வங்கி கணக்கில் தொகை திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கியே ஏற்க வேண்டும். திருடப்பட்ட வங்கி தொகையை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் திருடப்பட்ட 3 நாட்களுக்குள் வங்கிகளில் புகார் தெரிவிக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
அவ்வாறு செய்தால் திருடப்பட்ட முழு தொகையும் திரும்ப வழங்கப்படும். 4 முதல் 7 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படும். 7 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால் திருடப்பட்ட தொகைக்கு வங்கி பொறுப்பாகாது. எனவே உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
வங்கிக்கு சென்று புகார் அளித்தும் ஏற்றுக் கொள்ள இல்லை காவல் துறை அணுகி புகார் பதிவு செய்து நகல் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர் காவல் துறை அணுகினால் அலைகழிப்பு என்ன செய்வது
No chance.. I complain with in a 2 hour’s. But money not returned.
உடனடியாக online complintபண்ணி அதன் நகலை வங்கியில் கொடுத்து விடுங்கள்