வங்கியில் கடன் வாங்குபவர்கள், வழங்குபவர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிகள் அறிவிப்பு!

0
வங்கியில் கடன் வாங்குபவர்கள், வழங்குபவர்கள் கவனத்திற்கு - RBI புதிய விதிகள் அறிவிப்பு!
வங்கியில் கடன் வாங்குபவர்கள், வழங்குபவர்கள் கவனத்திற்கு - RBI புதிய விதிகள் அறிவிப்பு!
வங்கியில் கடன் வாங்குபவர்கள், வழங்குபவர்கள் கவனத்திற்கு – RBI புதிய விதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களில் கடன் வழங்கும் பல செயலிகள் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஒரு நொடியில் கடன்களை வழங்குகின்றன. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI:

இந்திய நாட்டின் கருவூலமாக கருதப்படும் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியின் மூலமாக பண நோட்டுகள் வெளியிடுவதை ஒழுங்குப்படுத்துதல், நிதியாதாரத்தை நிலையாக பாதுகாக்கும் வகையில் இருப்பினை கையாளுதல், வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், முறைசாரா நிதி நிறுவனங்களை மேற்பார்வையிட்டு கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்ற வங்கிகளை போல இந்த வங்கியை பணப்பரிவர்த்தனைக்களுக்கு பயன்படுத்த முடியாது. மேலும் இந்த வங்கிக்கு சென்னை, மும்பை, கொல்கத்தா, புதுதில்லி உள்ளிட்ட 4 மண்டலங்களும், நாடு முழுவதும் 22 கிளைகளும் உள்ளன.

விருதுநகரில் நாளை (ஏப்ரல் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் இந்த வங்கியானது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களில் கடன் வழங்கும் பல செயலிகள் தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஒரு நொடியில் கடன்களை வழங்குகின்றன. ஆனால் கடனை திரும்பப்பெறும் போது இந்த செயலிகள் தங்கள் இஷ்டத்துக்கு பல அடாவடியான செயல்களையும் செய்கின்றன. அதனால் பயனாளர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய ஆர்பிஐ தற்போது ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த புதிய விதியை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, டிஜிட்டல் கடன் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று கூறினார். இதன் மூலம் விரைவாக கடன் அளித்து, தன்னிச்சையாக தொகையை திரும்பப் பெறும் நிறுவனங்கள் மீது கண்காணிப்பு அதிகமாகும். டிஜிட்டல் கடன் வழங்குதல் தொடர்பாக பெறப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்யும் பணி முடிவடைந்துள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான உள் விவாதத்துக்கு பிறகு விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here