வங்கிகளில் இனி அபராத கட்டணம் உயர்வு? RBIன் புதிய திட்டம் – முழு விவரம்!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அபராத முறையை மாற்ற இருப்பதாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிக்கை விரைவில் வெளியாக இருக்கிறது.
அபராத முறை
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடும் கீழ் வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி அதன் அபராத முறையை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. அதாவது அபராத தொகையை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. இது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் அளவு, மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு சங்க உதவியாளர் பணி..டிச.1 கடைசி நாள் – உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் இந்த புதிய நடவடிக்கை அரசு நடத்தும் வங்கிகளை அதிகமாக தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்குள் கார்ப்பரேட் நிர்வாகத் தரத்தை மேம்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த பெரிய வங்கிகள் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.