ஜூலை மாத இறுதியில் மூன்று வங்கி விடுமுறை நாட்கள் – RBI பட்டியல்!
இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாத இறுதியில் வரும் மூன்று வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் அதிக நாட்கள் வங்கி விடுமுறைகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. முன்னதாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் பகுதி நேரமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. அதிலும் அத்தியாவசிய 4 சேவைகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கி விட்டது.
பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கோபியுடன் செல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!
ஜூலை மாதம் விரைவில் முடிய உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஜூலை மாதத்தில் இன்னும் மூன்று விடுமுறைகள் உள்ளது. இந்த மாதம் நாடு முழுவதும் அதிகபட்ச வங்கி விடுமுறை நாட்கள் வந்தது. இந்த விடுமுறைகள் அனைத்தும் மாநில வாரியான விடுமுறைகள், மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் திருவிழாகள் காரணமாக அறிவிக்கப்பட்டது.
TNUSRB காவலர் உடல் தகுதித்தேர்வு நாளை மறுநாள் தொடக்கம் – கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!
கடைசி மூன்று வங்கி விடுமுறைகள் தனியார் துறைக்கும், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளுக்கும் கூட பொதுவானதாக உள்ளது. கடைசி மூன்று விடுமுறை நாட்களில், இரண்டு வார இறுதி விடுமுறை மற்றும் ஒரு மத பண்டிகையும் வர உள்ளது. ஜூலை 31ம் தேதி வரவும் கெர் பூஜா பண்டிகை அகர்தலாவில் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
விடுமுறை நாட்கள்:
24 ஜூலை 2021 – 4 வது சனிக்கிழமை (வார இறுதி)
25 ஜூலை 2021 – ஞாயிறு (வார இறுதி)
31 ஜூலை 2021- சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)