இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறையா? RBI விளக்கம்!

0
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறையா? RBI விளக்கம்!
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறையா? RBI விளக்கம்!
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறையா? RBI விளக்கம்!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி 7 மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை அறிவிப்பு

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான விநாயக சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பல மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் தொடர்பான மொத்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. மேலும், வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து 18 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – செப்.4 சிறப்பு முகாம்!

அதில் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏழு மாநிலத்தில் உள்ள வங்கிகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருக்கும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் எந்தெந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு அதற்கு தந்தாற்போல வங்கிகளுக்கு செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here