ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – RBI அறிவிப்பு வெளியீடு!!

0
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - RBI அறிவிப்பு வெளியீடு!!
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - RBI அறிவிப்பு வெளியீடு!!
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – RBI அறிவிப்பு வெளியீடு!!

நாடு முழுவதும் மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய குறிப்பிட்ட செயலிகளில் டெபிட் கார்டு 16 இலக்க எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை சேமித்து வைக்க வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு சேமிக்க கூடாது என புதிய அறிவிப்பை ஆர்பிஐ அறிவித்துள்ளது.

RBI அறிவிப்பு:

நாடு முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. சமையல் சிலிண்டர் புக் செய்வது முதல் மின்சார கட்டணம் செலுத்துவது வரை ஆன்லைனில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாக செல்போன் ரீசார்ஜ்களும், மளிகை பொருள்கள் வாங்குதல், உணவு ஆர்டர் செய்தல் என அனைத்திற்கும் ஆன்லைன் சேவைகள் தேவைப்படுகிறது.

இந்த சேவைகளை செய்ய அமேசான், பிளிப்கார்ட், நெட்பிளிக்ஸ் போன்ற செயலிகள் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு விவரங்களான 16 இலக்க எண், காலாவதியாகும் தேதி போன்ற விவரங்களை முதல் முறை பதிவிட்டாலே அதை சேமித்து வைக்கிறது. பின்னர் வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்தும் போது பின்னால் இருக்கும் ரகசிய சிசிவி எண்ணை மட்டுமே வழங்கி பரிவர்த்தனைகளை செய்து வந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.300 கட்டண முன்பதிவு டிக்கெட்டுகள் – இன்று காலை வெளியீடு!!

ஆனால் தற்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செய்ய புதிய வழிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஆன்லைன் வணிக செயலிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமித்து வைக்க கூடாது. மேலும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனை செய்யும் போதும் 16 இலக்க எண், காலாவதியாகும் தேதி ஆகிவற்றை பதிவிட்டு செய்ய வேண்டும். இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று 1604 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

இந்த அறிவிப்பால் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை சற்று தாமதமாகும். இருந்தாலும் வாடிக்கையாளர்களின் வங்கி சேவை பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் தங்களது 16 இலக்க எண்ணை நினைவில் வைக்க வேண்டியிருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!