செப்டம்பர் மாதத்தில் இன்னும் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!
செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக வார இறுதிநாட்களையும் சேர்த்து 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதில் இரண்டு விடுமுறை ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள விடுமுறை பட்டியல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், இந்த வங்கிகள் தொடர்பான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாகவே வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த வார இறுதி நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்த பண்டிகை தின நாட்கள் எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதிலும், கேரளா மாநிலத்தில் தான் ஓணம் பண்டிகை காரணமாக அதிக நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2 விடுமுறை ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால் இன்னும் 11 நாட்கள் விடுமுறை இருக்கிறது.
வெள்ளத்தினால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!
செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்கள் இதோ,
- செப்டம்பர் 1 — விநாயக சதுர்த்தி காரணமாக கோவாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 4 – ஞாயிறு விடுமுறை
- செப்டம்பர் 6 – கர்ம பூஜை காரணமாக ஜார்க்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
- செப்டம்பர் 7 – ஓணம் பண்டிகை காரணமாக கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 8 – திருவோணத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
- செப்டம்பர் 9 – இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி காரணமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 11 – ஞாயிறு விடுமுறை
- செப்டம்பர் 18 – ஞாயிறு விடுமுறை
- செப்டம்பர் 21- ஸ்ரீ நாராயண குரு சமாதி திவாஸ் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
- செப்டம்பர் 24 – நான்காவது சனிக்கிழமை
- செப்டம்பர் 25 – ஞாயிறு விடுமுறை
- செப்டம்பர் 26 – நவராத்திரி ஸ்தாபனம் காரணமாக மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்