அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI முக்கிய எச்சரிப்பு – ஆன்லைன் மோசடி!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI முக்கிய எச்சரிப்பு - ஆன்லைன் மோசடி!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI முக்கிய எச்சரிப்பு - ஆன்லைன் மோசடி!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI முக்கிய எச்சரிப்பு – ஆன்லைன் மோசடி!

வங்கி வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் மோசடி என்ற பெரியதொரு சிக்கலில் இருந்து அவர்களை விடுவிக்கும் பொருட்டு சில எச்சரிக்கை செய்திகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுற்றறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

வங்கி மோசடி

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தற்போது நூதன முறையில் பல்வேறு மோசடிகள், கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இவற்றை எல்லாம் தடுக்கும் நோக்கத்தில் பல கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் தினசரி எங்கோ ஒரு இடத்தில் இப்படிப்பட்டதான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் மூலம் எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI), தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய மோசடி குறித்த தகவல்களை அறிவித்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய நடிகர் அகிலன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரகசிய தகவல்களைப் பெற்று மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பான எச்சரிக்கை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின் படி, பெரிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை போன்றதொரு டோல் பிரீ எண்ணை பயன்படுத்தி சமூக பொறியியல் பிரிவின் கீழ், மோசடி செய்யப்பட்டு வருகிறது. அதன் படி மோசடி செய்பவர்கள், மேற்பார்வை செய்யப்பட்ட நிறுவனத்தின் (SE) கட்டணமில்லா எண்ணைப் போன்ற தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இன்று அறிமுகமாகிறது Ola Electric Scooter – விலை, மைலேஜ் உள்ளிட்ட முழு விபரம்!

பின்னர் இந்த சந்தேகத்திற்குரிய எண்களை, ட்ரூகாலர் போன்ற மொபைல் ஆப்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் அடையாள பயன்பாடுகளை பதிவு செய்கிறார்கள். மேற்பார்வை செய்யப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் சட்டப்பூர்வ நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் கவனமாக இல்லாவிட்டால் மோசடி செயல்பாடுகள் மூலம் முக்கியமான தகவல்களை கொடுத்து இழப்பை சந்திக்க நேரிடும். பொதுவாக, கட்டணமில்லா எண்கள் 800, 888, 844, 855, போன்ற குறியீடுகளுடன் தொடங்குகின்றன.

தமிழகத்தில் இயல், இசை, நாடக மன்றத்தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!

இதற்கு முன்னால் 1 என்ற எண் இணைக்கப்பட்டால் இது 1800 223 464 என்ற டோல்பிரீ எண்ணை போல தோற்றமளிக்கிறது. ஆனால் மோசடி செய்பவர் 1 என்ற எண்ணை தவிர கட்டணமில்லா எண் மூலம் அழைப்பார்கள். பின்னர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் அழைப்பதாக கூறி அடையாள விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மேற்பார்வை நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ய கூறுவார்கள். இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க SE இன் உண்மையான எண்ணை விட்டு விட்டு தவறான எண்ணை அழைப்பார்கள்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தொடர்ந்து டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள், பான் கார்டு விவரங்கள், பயனர் பெயர், ஓடிபி போன்ற முக்கிய தகவல்களை அளிக்கும்படி கேட்கின்றனர். இதன் மூலம் மொத்த மோசடியும் அரங்கேறுகிறது. அந்த வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் உதவியுடன் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், மேற்பார்வையிடப்பட்ட நிறுவனங்கள் இப்போது மோசடி செய்பவர்களால் ஏற்படும் சேதத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மக்களிடையே ஒரு எச்சரிக்கை செய்தியை கொண்டு செல்ல வலைதளங்கள், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் SMS ஆகியவற்றை வங்கி நிர்வாகங்கள் பயன்படுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here