இந்தியாவில் அதிகரித்த ஏடிஎம் கட்டணங்கள் – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

0
இந்தியாவில் அதிகரித்த ஏடிஎம் கட்டணங்கள் - ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் அதிகரித்த ஏடிஎம் கட்டணங்கள் - ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் அதிகரித்த ஏடிஎம் கட்டணங்கள் – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல வங்கிகளும் ஏடிஎம் -ல் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வமாக கட்டண விவரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் மிகவும் சரிவடைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் நாட்டில் கொரோனா காலத்தில் கொண்டு வரப்பட்ட பொதுமுடக்கம், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் தான். இந்த நடவடிக்கைகளால் நாட்டில் வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு ஆகியவை அதிகரித்து காணப்பட்டது. இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய ரிசர்வ் வங்கி பண பரிமாற்றத்தில் பல புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.

நாட்டில் பல வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மேலும் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதாவது,

1. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI):

இந்தியாவில் முன்னணி வங்கியான எஸ்பிஐயில் மெட்ரோ பகுதிகள் தவிர ஒரு பிராந்தியத்திற்கு ஏடிஎம் மூலம் இலவசமாக 5 முறை பணம் எடுக்கலாம். இதனை தொடர்ந்து எஸ்பிஐ ஏடிஎம் ல் பணம் எடுக்க ரூ.5 கட்டணமும், எஸ்பிஐ அல்லாத ஏடிஎம் ல் பணம் எடுத்தால் ரூ. 10 கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி பரிவர்த்தனை வரம்பு குறைந்தபட்சமாக ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ. 20,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB):

பஞ்சாப் நேஷனல் வங்கியில் எஸ்பிஐ போன்று மெட்ரோ நகரங்களில் மூன்று இலவச ஏடிஎம் களில் பணம் எடுப்பதையும், மற்ற பிராந்தியங்களில் ஐந்து முறை ஏடிஎம் களில் பணம் எடுப்பதையும் அனுமதிக்கிறது. மேலும் கூடுதலாக வங்கி ஏடிஎம் களில் பணம் எடுக்க ரூ. 10 வசூலிக்கிறது. இதை தொடர்ந்து வங்கியின் தினசரி பணம் எடுக்கும் உச்ச வரம்பு கிளாசிக் கார்டுதாரர்களுக்கு ரூ. 25,000 முதல் தங்கம் மற்றும் பிளாட்டினம் கார்டுதாரர்களுக்கு ரூ. 50,000 வரை இருக்கும் என தெரிவித்துள்ளது.

3. HDFC வங்கி:

இந்தியாவில் HDFC வங்கி முக்கிய நகரங்களில் மூன்று இலவச பண பரிவர்த்தனைகளையும், ஒட்டு மொத்தமாக ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும் வழங்கி வருகிறது. மேலும் பயன்படுத்தப்படும் அட்டையின் வகைகளை பொறுத்து பணம் எடுக்கும் வரம்பு ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு ஏடிஎம் பரிவர்த்தனைக்கு ரூ.125 கட்டணமாக வசூலிக்கிறது.

4. ஐசிஐசிஐ (ICICI) வங்கி :

ஐசிஐசிஐ வங்கி மற்ற வங்கிகளை போல் 3 மற்றும் 5 பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் கூடுதலாக ரூ.21 செலுத்த வேண்டும். ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 50,000 வரம்பு உள்ளது. ICICI அல்லாத ஏடிஎம்களை பயன்படுத்தும் போது பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ. 1,000க்கு ரூ. 5 அல்லது ரூ. 25,000க்கு மேல் உள்ள தொகைகளுக்கு ரூ.150 என நிர்ணயித்துள்ளது. மேலும் ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரம்பு உள்ளது.

5. ஆக்ஸிஸ் வங்கி:

ஆக்ஸிஸ் வங்கி முதல் 3 முதல் 5 வரை இடத்துக்கு ஏற்ப இலவசமாக பணம் எடுக்கும் சேவையை அனுமதிக்கிறது. இதர சேவைகளுக்கு கட்டணமாக ரூ. 21 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்க ரூ.40 ஆயிரம் வரை வரம்பு நிர்ணயித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here