Tokyo Olympics Wrestling 2020 : இந்தியர்களின் கனவு தகர்ந்தது! ரவிக்குமாருக்கு வெள்ளி பதக்கம்!
Tokyo Olympics ஆண்கள் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கிய ரவிக்குமார் தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு எதிராக விளையாடிய ரஷ்ய வீரரும், உலக சாம்பியனுமான ஜவுர் யுகெவ் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலின் காரணமாக கடந்த வருடம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற்று வருகின்றது. இந்த முறை இந்தியாவின் சார்பாக 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலவித போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்தியா 1 வெள்ளி பதக்கம், 3 வெண்கல பத்தகங்களுடன் பட்டியலில் 66வது இடத்தில் உள்ளது.
TNUSRB காவலர் 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு – 442 பேர் தேர்ச்சி! 52 பேர் தகுதி நீக்கம்!
ஆண்கள் ஒற்றையர் மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் ரவிக்குமார் களமிறங்கினார். அரையிறுதி போட்டியில் அவருக்கு எதிராக கஜகஸ்தான் வீரர் விளையாடினார். போட்டியின் போது எதிரணி வீரர் ரவிக்குமாரை கடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட ரவிக்குமார் அனைத்து வலிகளையும் பொறுத்து கொண்டு விளையாடினார். இதனால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறிய ரவிக்குமார், இன்று ரஷ்ய வீரரும் உலக சாம்பியனுமான ஜவுர் யுகெவ்வை எதிர்கொண்டார்.
TN Job “FB
Group” Join Now
இந்த போட்டியில் 4-7 புள்ளிக்கணக்கில் ரவிக்குமார் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பினை நழுவ விட்டுள்ளார். இதனால் அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. தங்க பதக்கம் வென்று ரவிக்குமார் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. இருப்பினும் இறுதி வரை உறுதியுடன் போராடிய அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.