T20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி? புதிய தகவல்!

0
T20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி? புதிய தகவல்!
T20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி? புதிய தகவல்!
T20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி? புதிய தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளவர் ரவி சாஸ்திரி. இவர் தனது ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன், அணியை விட்டு பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பணி விலகல்:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரரும் ஆன ரவி சாஸ்திரி கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். எனினும் BCCI நடைமுறையின் படி, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் 60 வயதுடன் தனது பதவியை விட்டு விலக வேண்டும். அந்த வகையில் கடந்த மே மாதத்துடன் 59 வயது நிறைவு பெற்ற ரவி சாஸ்தி தனது பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இவரை தொடர்ந்து அப்பதவிக்கு சவுரவ் கங்குலி வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள T 20 உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், ரவி சாஸ்திரி தனது தலைமை பொறுப்பில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் T20 உலகக் கோப்பைக்குப் பிறகு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரவி சாஸ்திரி, கிரிக்கெட் வாரியத்துடனான தனது ஒப்பந்தம் முடிவடையும் போது போட்டியில் இருந்து பிரிந்து செல்ல இருக்கிறார்.

இந்தியாவில் மதிய உணவு திட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு – அதிகாரிகள் ஆலோசனை!

அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புதிய பயிற்சியாளர் குழுவை நியமிக்க திட்டமிட்டு உள்ளது என்று சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதன்முதலில் 2014 இல் நடைபெற்ற T 20 உலகக் கோப்பை போட்டியில் ரவி சாஸ்திரி பொறுப்பேற்றார். அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு அவர் 2017 இல் முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். எனினும் அவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு வெளிநாட்டு தொடர்களை இந்தியா வென்றது.

மேலும் பாரத் அருண், இந்திய வீரர்களின் பந்துவீச்சை உலகத்தரத்தின் ஒன்றாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், இந்தியாவால் ICC கோப்பையை பெற்றுத் தர முடியவில்லை. தவிர 2019ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்திருந்தது. இந்த பின்னடைவுகள் ஒருபுறம் இருக்க, இந்தியா தனது நான்கு ஆண்டு காலப்பகுதியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதனை புரிந்தது.

சன் டிவி “ரோஜா” சீரியலில் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் – வெளியான ப்ரோமோ!!

தற்போது இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்தை அடைய ஒரு மாற்றம் தேவை என்று வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும், உலகை வெல்லும் வீரர்களை உருவாக்க வாரியம் விரும்புகிறது. அதன்படி T 20 உலகக் கோப்பைக்குப் பிறகு பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வாரியம் வரவேற்கும் என கூறப்படுகிறது. இப்பணிக்கு டிராவிட் அனுபவம் மிக்கவராக இருப்பதாக குழுவின் சில உறுப்பினர்கள் கருதுகின்றனர். NAC உடனான டிராவிட் ஒப்பந்தம் செப்டம்பரில் முடிவடைகிற நிலையில், பயிற்சியாளர் பணிக்கு அவர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!