சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கேப்டன் பாஃப் டு பிளெசிஸ்? ரவி சாஸ்திரி கருத்து!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கேப்டன் பாஃப் டு பிளெசிஸ்? ரவி சாஸ்திரி கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கேப்டன் பாஃப் டு பிளெசிஸ்? ரவி சாஸ்திரி கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கேப்டன் பாஃப் டு பிளெசிஸ்? ரவி சாஸ்திரி கருத்து!

இந்த ஆண்டுக்கான IPL 2022 சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கேப்டன் பாஃப் டு பிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

CSK அணி

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த ஆண்டிற்கான 15வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. IPL போட்டிகளில் அசைக்க முடியாத வலிமை மிக்க அணியாக திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை படைத்த சாதனைகள் ஏராளம். ஒவ்வொரு முறையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு களத்தில் காணப்படும் CSK அணி இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 4 போட்டிகளிலும் CSK தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சி முக்கிய காரணங்களில் ஒன்றாக கவனம் ஈர்த்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதாவது, ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இன்னும் தங்கள் வெற்றி கணக்கை திறக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இப்போது சிஎஸ்கே ஜடேஜாவை கேப்டனாக்கியது குறித்து பாராட்டுக்கள் கிடைத்து வரும் அதே வேளையில் சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. அந்த வகையில் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஃபாஃப் டு பிளெசிஸை சென்னை அணி விட்டு விடக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். சாஸ்திரியின் கூற்றுப்படி, தோனிக்கு அடுத்ததாக பாஃப் கேப்டனாக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அது ஜடேஜாவை சுதந்திரமாக விளையாட அனுமதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ‘ஜடேஜா போன்ற ஒரு திறமையான வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். சென்னை அணி மீண்டும் யோசித்தால், பாஃப் டு பிளெஸ்சிஸ் மேட்ச் வின்னர், நிறைய விளையாடியவர் என்பதாலும் அவரைப் போக விடாமல் இருந்திருக்க வேண்டும். தோனி அணிக்கு கேப்டனாக விரும்பவில்லை என்றால், பாஃப் கேப்டனாகவும், ஜடேஜா ஒரு வீரராகவும் விளையாடியிருக்கலாம். ஏனெனில் ஜடேஜா சுதந்திரமாக விளையாட முடியும். கேப்டன்சியின் அழுத்தமும் இருந்திருக்காது’ என்று கூறி இருக்கிறார். இப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பாஃப் டு பிளெசிஸ் ஒரு தலைவராக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here