இனி ரேஷன் பொருட்களை கைபேசி மூலம் அறியலாம் – வழிமுறைகள் இதோ!!
இந்தியாவில் தற்போது ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் மூலம் ரேஷன் பொருட்களை பெறும் வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
நாடு முழுவதும் ரேஷன் கார்டுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் பணியிட மாற்றம் காரணமாக அடிக்கடி இருப்பிடங்களை மாறி வருவதால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் பல இன்னல்கள் ஏற்பட்டு வரும். இந்நிலையில் இவர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு ஓர் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதுதான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம். இதன் மூலம் மக்கள் எங்கு இருந்தாலும் தங்களது ஸ்மார்ட் கார்டுகளை காண்பித்து தங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாமாம். இதனால் பணியின் காரணமாக இடமாறும் மக்கள் அதிகம் பயனடைந்தனர். இதனை மேலும் எளிமையாக்கும் வகையில் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் ரேஷன் பொருட்கள் பெறும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதற்கான செயலியை உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் அறிமுகப்படுத்தி உள்ளார்.
ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – இன்று முதல் அமல்!!
அவர் ‘மேரா ரேஷன் ஆப்’ என்னும் செயலியை அறிமுகப்படுத்தினார். மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்கள் ‘மை ரேஷன் ஆப்’ என்னும் செயலி மூலம் பயனடைவார்கள். இந்த செயலியில் பயனாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் என்ன பொருட்கள் உள்ளது, நாம் கடைசியாக எங்கு பொருட்களை பெற்றுள்ளோம், நாம் பொருட்களை வாங்குவதற்கு எப்போது கடைக்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட தகவலை காண முடியும். இந்த செயலியை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.