ரேஷன் பொருட்கள் பெறுபவர்களின் தரநிலை தயாரிப்பு – மத்திய உணவுத்துறை தகவல்!!

0
ரேஷன் பொருட்கள் பெறுபவர்களின் தரநிலை தயாரிப்பு - மத்திய உணவுத்துறை தகவல்!!
ரேஷன் பொருட்கள் பெறுபவர்களின் தரநிலை தயாரிப்பு - மத்திய உணவுத்துறை தகவல்!!
ரேஷன் பொருட்கள் பெறுபவர்களின் தரநிலை தயாரிப்பு – மத்திய உணவுத்துறை தகவல்!!

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை ரேஷன் பொருட்களை பெறுபவர்களின் தரநிலையை தீர்மானிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளது.

புதிய தரநிலை:

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளின் மூலம் பொருட்கள் பெறும் மக்களின் தரநிலையை புதிதாக வடிவமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தற்போதுள்ள விதிகளை மாற்றி நாட்டின் நடப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப விதிகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு மாநில அரசுகளுடன் பல கட்டங்களாக பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடல் – கொரோனா விதிமுறைகள் மீறல்!

நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெறுவதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையினர் அறிவித்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு அதிகம் உதவும் வகையில் புதிய விதிகள் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும், பொருளாதார வசதிகள் குறைந்தவர்களுக்கு அரசின் உதவிகள் அதிக அளவில் சென்று சேருவதற்கு வசதியாகவும் விதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி அட்டவணை – கல்வித்துறை வெளியீடு!!

இது குறித்து ஆறு மாதங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே அறிவித்துள்ளார். தரநிலையைப் பற்றி மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலும் தரநிலைகள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மாதத்திலேயே இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், தரநிலையின் படியே இனி ரேஷன் பொருட்கள் விநியோகம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here