தமிழகத்தில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது – அரசுக்கு கண்டனம்!

0
தமிழகத்தில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது - அரசுக்கு கண்டனம்!
தமிழகத்தில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது - அரசுக்கு கண்டனம்!
தமிழகத்தில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது – அரசுக்கு கண்டனம்!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 3 ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் போன்றவைகளை பெற்று பயனடைகின்றனர். ரேஷன் அட்டைகள் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 6.94 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

TCS, Infosys, HCL Tech ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – முக்கிய விபரங்கள் இதோ!

தற்போது 2022ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Airtel vs Jio vs VI நிறுவனங்களின் டாப் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமான வரி செலுத்துவோரின் விவரங்களையும் அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையிடம் உணவு வழங்கல் துறை பெற்று வருகிறது. வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் பயனாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டம் என்ற நோக்கத்திலிருந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள இலக்கு சார்ந்த பொது விநியோக திட்டத்திற்கு திசை மாறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!