ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!

இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

புதிய திட்டம்

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை என்ற கை ரேகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் முதியவர்களுக்கு கை ரேகை பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதனால் ரேஷன் கார்டுதாரர்கள் உணவு பொருட்களை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அத்துடன் ரேஷன் கடைகளில் சரியான எடையில் உணவு பொருட்களை வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால் இதனை தவிர்க்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலம் அரசு, “உணவு தானிய ஏடிஎம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, இந்த புதிய திட்டத்தின்படி தேவைப்படும்போது ஏடிஎம்களில் பணத்தை எடுப்பது போன்று இனி தானியங்களை பெற முடியும். அதனால் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து ரேஷன் பொருட்களை பெற வேண்டியதில்லை என்று மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி ஆதார் சேவைகள்!

மேலும் இவர் இது தொடர்பாக கூறியதாவது, இந்த புதிய திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் மாநிலம் முழுவதும், “உணவு தானிய ஏடிஎம் திட்டம்” என்ற திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் முதற்கட்டமாக சில மாவட்டங்களில் அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஏற்கனவே ஒரிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் தமிழகத்திலும் எப்போது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here