தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – குறைதீர் முகாம்!

0
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - குறைதீர் முகாம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - குறைதீர் முகாம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – குறைதீர் முகாம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வரும் சனிக்கிழமை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே, இந்த முகாமின் மூலமாக பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு குறைதீர் முகாம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அனைத்து மலிவு விலை பொருட்களையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அவ்வப்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என சில குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் இருக்கும் நிறை குறைகளை கேட்டறிய அந்தந்த மாவட்டங்களிலேயே பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரியில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றாலும் இந்த கூட்டத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண்ணை ரேஷன் கார்டில் பதிவு செய்தல் முதலிய தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Office ல் மாதம் ரூ.2500 வரை அக்கவுண்டுக்கு வரும் திட்டம் – முழு விவரம் இதோ!

மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் நரிக்குறவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புதிய குடும்ப அட்டைகள் பெற வேண்டும் என விரும்பினால் அவர்களும் இந்த கூட்டத்தில் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த திம்மசமுத்திரம், உத்திரமேரூர் வட்டத்தில் கம்மாளம்பூண்டி, வாலாஜாபாத் வட்டத்தில் முத்தியால்பேட்டை, பெரும்புதூர் வட்டத்தில் மொளச்சூர், குன்றத்தூர் வட்டத்தில் ஆதனூர் ஆகிய கிராமங்களில் குறைதீர் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here