தனது நீண்ட நாள் ஆசையை அடைந்த ராஷ்மிகா – ரசிகர்களுக்கு நன்றி! வைரலாகும் பதிவு!

0
தனது நீண்ட நாள் ஆசையை அடைந்த ராஷ்மிகா - ரசிகர்களுக்கு நன்றி! வைரலாகும் பதிவு!
தனது நீண்ட நாள் ஆசையை அடைந்த ராஷ்மிகா - ரசிகர்களுக்கு நன்றி! வைரலாகும் பதிவு!
தனது நீண்ட நாள் ஆசையை அடைந்த ராஷ்மிகா – ரசிகர்களுக்கு நன்றி! வைரலாகும் பதிவு!

தென்னிந்தியாவின் தற்போதைய சூப்பர் ஹிட் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா தனது நீண்ட ஆசை நிறைவேற இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனோடு ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

நீண்ட நாள் ஆசை:

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பிறகு இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான். குறைந்த நாட்களிலேயே அதிக அளவில் புகழை அடைந்தவர் ராஷ்மிகா. இவரது படங்களுக்கு என்று ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர். அதுமட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் உள்ள ரசிகர்களும் அதிக அளவில் ரசித்து வந்தனர்.

விஜய் டிவி ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம் – வைரலாகும் வீடியோ!

நேஷனல் கிரஷ் என்ற பட்டத்தையும் ராஷ்மிகாவிற்கு கொடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தவிர குறைந்த காலத்திலேயே பல மெகா ஹிட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்மிகாவின் பிறந்த நாள் வந்தது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. அதேநாளில் தளபதி விஜய்யின் 66 வது படத்தில் ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளதை தெரிவித்தார்.

பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?

அதற்கு அடுத்த நாள் அந்த படத்தின் பூஜைக்காக விஜய்யுடன் கலந்து கொண்டார். அப்போது ஒரு பேன் கேர்ள் மொமெண்ட் ஆக அதை கொண்டாடினார். விஜய்க்கு சுத்தி போடுவது, அவரது பக்கத்தில் ஆச்சர்யமாக நிற்பது போன்ற போட்டோக்கள் அனைத்தும் மிகவும் வைரலானது. இதற்கு தனது சமூக வலைப்பக்கத்தில் ரஷ்மிகா பதில் அளித்துள்ளார். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேற இருக்கிறது. அவருடன் நடிப்பது, நடனம் ஆடுவது அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!