சன் டிவியில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் இணையும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவியில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் இணையும் புதிய சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் இணையும் புதிய சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் இணையும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங் போட்டியில் மற்ற சேனல்களை விட அதிக கவனத்தை பெறுவதற்கு சன் டிவியில் தற்போது ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், மீனா போன்றவர்களை வைத்து ஒரு புதிய சீரியல் தொடங்கப்பட உள்ளது.

புதிய சீரியல்:

சின்னத்திரையின் அனைத்து சேனல்களிலும் பல்வேறு கதையம்சங்களை கொண்ட தொடர்கள் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகிறது. இந்த தொடர்களின் டிஆர்பி அனைத்து சேனல்களுடன் ஒப்பிட்டு எவை முன்னையில் உள்ளது என்று கண்காணிக்கப்படுகிறது. சின்னத்திரை சீரியல்கள் தான் மக்களின் பொழுதுபோக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்தவகையில் சீரியல்களில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரிட் ஆன சன்டிவி சமீபத்தில் பல புதிய தொடர்களை ஆரம்பித்து அவை அனைத்தும் சிறப்பாக செல்கிறது. ஆனாலும் முன்னர் போல் இல்லாமல் சமீப காலங்களில் சன் டிவியின் தொடர்கள் வரிசையில் முன்னணிக்கு வருவதில்லை.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சிவகாமி வீட்டில் நடந்த சோகம் – தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!

ஆனால் சன்டிவியின் குறிப்பாக சன்டிவியின் ரோஜா, வனத்தைப்போல, கண்ணான கண்ணே தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா நடிக்கும் கயல் சீரியலும் புதிதாக தொடங்கப்பட்டது. கயல் சீரியல் தற்போது நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. இதனால் மேலும் சில சீரியல்களை புதிதாக தொடங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக சன்டிவி பிரபல நடிகைகள் ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களை வைத்து எடுக்கப்பட்ட பல சீரியல்கள் மெகா ஹிட் ரகங்களாக அமைந்தது.

பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு வரும் ரஞ்சித், பிரியா ராமனை தடுக்கும் கோபி – ஸ்பெஷல் எபிசோடு!

இதனால் இவர்களை மீண்டும் சன்டிவி சீரியலில் களம் இறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ரேட்டிங்கை மீண்டும் பெற்று விடலாம் என்று நம்புகின்றனர். தற்போது இதை கருத்தில் கொண்டு சன் டிவி புதிய தொடர் ஒன்றுக்கு திட்டம் தீட்டி வருகிறது. ராதிகா சரத்குமார், குஷ்பு,மீனா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட அவர்கள் இந்த தொடரில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!