‘இராமாயணம்’ சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

0
'இராமாயணம்' சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி திடீர் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
'இராமாயணம்' சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி திடீர் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
‘இராமாயணம்’ சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

குஜராத்தை சேர்ந்த முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான அரவிந்த் திரிவேதி வயது மூப்பின் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். அன்னாரது திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மரணம்

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் DD நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இராமாயணம்’ சீரியலில் ராவணனாக நடித்திருந்தவர் நடிகர் அரவிந்த் திரிவேதி. குஜராத்தை சொந்த ஊராக கொண்ட நடிகர் அரவிந்த் திரிவேதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் குஜராத்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் ஹிந்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ரோஜா’ வரை – ப்ரோமோக்களின் டாப் கமெண்ட்ஸ்!

இதற்கிடையில் கடந்த 1987ம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் ஒளிபரப்பான ‘இராமாயணம்’ தொடரில் நடித்திருந்த இவரது ராவணன் கதாப்பாத்திரம் பல மொழிகளை கடந்து பேசப்பட்டது. மேலும் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அரசியல்வாதியாகவும் இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் 82 வயதான நடிகர் அரவிந்த் திரிவேதி வயது மூப்பு மற்றும் உடல்நிலை கோளாறுகள் காரணமாக நேற்று (அக்.5) இரவு காலமானார்.

விஜய் டிவி ‘Bigg Boss Season 5’ Promo 2 ரிலீஸ் – மனம் திறக்கும் ஷ்ருதி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இது தொடர்பாக நடிகர் அரவிந்தின் உறவினர் கஸ்துப் திரிவேதி கூறும் போது, அவருக்கு சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதனுடன் பல்வேறு உறுப்புகளும் செயல் இழந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து அரவிந்த் திரிவேதியின் இறுதிச்சடங்கு இன்று (அக்.6) காலை மும்பையில் நடைபெற்றுள்ளது. அன்னாரது திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here