கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராமமூர்த்தி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!

0
கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராமமூர்த்தி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் திருப்பம்!
கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராமமூர்த்தி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீர் திருப்பம்!
கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராமமூர்த்தி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பேசத் துவங்கி இருக்கும் ராமமூர்த்தி, கோபி பற்றிய உண்மைகளை தனது குடும்பத்தாரிடம் சொல்வாரா என்ற பரபரப்பான கதைக்களத்தோடு அடுத்த கட்டம் நகர இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், உலக்கைக்கு ரெண்டு பக்கம் இடி என்று சொல்வது போல ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கோபிக்கு பல பக்கங்களில் இருந்து ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இந்த சீரியலில் தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் ராதிகாவுடன் பழகி வரும் கோபி, தனது குடும்பத்தாரை மறைத்து பொய்யான நாடகம் ஆடி ராதிகாவையும் ஏமாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் கோபி எப்போதாவது சிக்கி விடுவார் என்ற எதிர்பார்ப்புகள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால், எவ்வளவு அடித்தாலும் தாங்குவேன் என்பது போல கோபியை எத்தனை பேர் அடித்தாலும் ராதிகாவுக்காக அவர் அத்தனையையும் நின்று சமாளித்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கத்தில், கோபி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட எழில், செல்வி மற்றும் ராமமூர்த்தியால் அவருக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்த வகையில், கோபி பற்றிய உண்மைகளை சொல்ல புறப்படும் போது ராமமூர்த்தி கீழே விழுந்து வாய் பேசமுடியாமல் போகிறார். தவிர, கோபியை ஒரு பெண்ணுடன் பார்த்த எழில் அது ராதிகா என்பதை இன்று வரையும் அறிந்து கொள்ளவில்லை.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை அம்மாவாகும் அழகான தருணம் – ரசிகர்கள் உற்சாகம்!

அதனால் அவருக்கும் இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் கோபி பற்றி பேசும் போது பாக்கியாவிடம் உண்மைகளை சொல்லும் செல்விக்கு திட்டு மட்டுமே கிடைக்கிறது. இதில் பாக்கியாவின் கண்மூடித்தனமான நம்பிக்கை அவரை ஒன்றும் செய்ய முடியாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இப்படி அனைத்து விஷயங்களும் கோபிக்கு சாதகமாக இருக்கிறது என்று நினைக்கும் போது தான், கடந்த வாரம் வெளியான மெகா சங்கம எபிசோடுகளில் மூர்த்தி மூலம் ராதிகாவுக்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது.

இப்போது, ராதிகா கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி நிபந்தனை விதித்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழலில் கோபி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது கதையில் ஸ்வாரசியத்தை கூட்டி இருக்கிறது. மறுபக்கத்தில், இத்தனை நாட்களாக வாய் பேச முடியாமல் இருந்த ராமமூர்த்தி இன்றைய எபிஸோடில் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கிறார். இப்போது, கோபியின் விஷயத்தில் இன்னும் மீதம் இருக்கும் ஒரே நம்பிக்கை ராமமூர்த்தி தான். அந்த வகையில் கோபி பற்றிய அனைத்து உண்மையையும் தெரிந்து கொண்ட ராமமூர்த்தி தான் கோபியின் விஷயத்தில் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here