பாக்கியாவிடம் கோபியை கோர்த்து விட்ட ராமமூர்த்தி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

0
பாக்கியாவிடம் கோபியை கோர்த்து விட்ட ராமமூர்த்தி - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடு!
பாக்கியாவிடம் கோபியை கோர்த்து விட்ட ராமமூர்த்தி - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோடு!
பாக்கியாவிடம் கோபியை கோர்த்து விட்ட ராமமூர்த்தி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தான் சுவாரஸ்யம் அதிகரிக்கும் வகையில் கதையில் மாற்றங்கள் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி தனது வாயை கொடுத்து மாட்டிய சம்பவங்கள் குறித்து ஈபதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி தொடரில் எழில் கோபியிடம் நீங்க பட விழாவுக்கு வரக்கூடாது என்று சொன்னதை தெரிந்து கொண்ட பாக்கியா கோபத்தில் எழிலிடம் பேசமாட்டேன் என சொல்லியிருந்தார். அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் எழில் தனது அம்மா பாக்கியா பேசாத ஒரு காரணத்துக்காக கோபியிடம் மன்னிப்பு கேட்கிறான். அதற்கு கோபியும் பரவாயில்லை விடுப்பா, நீதான சொன்ன ந ஏதும் நினச்சிக்கலை! எல்லாரும் படம் குறித்து நல்ல விதமா சொன்னாங்க, அத கேக்குறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கண்டிப்பாக படத்தை முதல் நாள் முதல் காட்சி போய் பார்ப்பேன் என கூறுகிறான்.

பாரதியை கல்யாணம் செய்ய வற்புறுத்தும் ஹேமா, கண்ணம்மாவின் முடிவு? – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் !

எழில் மன்னிப்பு கேட்டதால் பாக்கியாவும் அவரிடம் பேசுகிறாள். அவ சென்ற பிறகு எழில் கோபியிடம் நான் ஒன்னும் மனசார மன்னிப்பு கேக்கல அப்படி கேக்குற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யல. என்கிட்டே எங்க அம்மா பேசணும்னு ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டேன். இந்த வீட்டுக்கு நீங்க செய்யுற துரோகம் ரொம்ப நாள் மறைக்க முடியாது. ஒரு நாள் கண்டிப்பா எல்லாருக்கும் தெரியத்தான் போகுது, அப்போ நான் உங்களை சும்மாவே விட மாட்டேன் என சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

இதனிடையில் இனியா போனில் பேசி கொண்டிருப்பதை பார்க்கும் பாக்யா அவளிடம் யார்? என்ன? என விசாரிக்க, எனக்கு இந்த வீட்ல பிரைவேசியே இல்லையா? எனக்கு தனி ரூம் வேணும் என பாக்யவிடம், இனியா கேட்க அதெல்லாம் முடியாது என சட்டுனு சொல்லிவிடுகிறாள். மறுநாள் இனியா, கோபியிடம் இதை பற்றி சொல்ல உடனே ஈஸ்வரி அப்போ பாக்கியா எங்க படுப்பா? என்ற கேள்விக்கு ராமமூர்த்தி சைகையில் கோபியை கை நீட்டினார். ஈஸ்வரியும் ஆமா இனிமே பாக்கியா, கோபி ரூம்ல தங்கட்டும் என சொல்லி முடிக்கிறார். ‘தவளை தன் வாயால் கெடும்’ என்ற கதையா கோபி கதை முடிஞ்சது.

கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்த பின்னர் தாயாகும் முல்லை – மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!

அதன் பின்னர் ராதிகா வீட்டிற்கு சென்றிருந்த கோபியிடம் அவள் சமையல் ஆர்டரை பாக்கியாவிடம் கொடுத்திருப்பதை பற்றி சொல்ல, உடனே கோபி கடுப்பாகி என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. நான் நல்ல கேட்டரிங்கா பார்த்து கொடுத்து இருப்பேன்ல என்று பதட்டத்தில் கத்துகிறான். அவன் பேச்சில் கோபத்தை கண்டா ராதிகா சந்தேகத்துடன் கோபியை பார்த்து நான் என் பிரண்ட்ஸ் பற்றி பேசும்போதெல்லாம் அமைதியா இருக்கீங்க ஆனா டீச்சர் பத்தி பேசினா மட்டும் ஏன் எப்போவும் கோபப்படுறீங்க என கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here