பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் – குஜராத் அரசு உத்தரவு!

0
பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் - குஜராத் அரசு உத்தரவு!
பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் - குஜராத் அரசு உத்தரவு!
பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் – குஜராத் அரசு உத்தரவு!

குஜராத் மாநிலத்தின் எட்டு நகரங்களில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி இரவு நேர ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வு:

குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு அதிக அளவில் இருந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் தீவிர முறையில் கண்காணிக்கப்பட்டது. முன்னதாக கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் மெல்ல குறைந்து வந்தது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.

நாளை முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு – அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு!

இருப்பினும், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி மாநிலத்தில் கொண்டாட இருக்கும் ஜன்மாஷ்டமி பண்டிகை காரணமாக இரவு நேர ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜன்மாஷ்டமி கொண்டாடுவதற்கு வசதியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி முதல் அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத், பாவ்நகர், ஜாம்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய அப்பகுதிகளில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், இந்த பகுதிகளில் விநாயகர் திருவிழாவிற்காக செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இது தொடர்பான விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 200 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கோவில் வளாகத்தில் ஒரே நேரத்தில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொது இடங்களில் 4 அடி விநாயகர் சிலையும், வீடுகளில் இரண்டு அடி சிலை வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்களில் ஆரத்தி மற்றும் பிரசாத விநியோகம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, மற்ற மத அல்லது கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!