குக் வித் கோமாளிகளுடன் லூட்டி அடிக்கும் தொகுப்பாளர் ரக்சன் – வைரல் வீடியோ!

0
குக் வித் கோமாளிகளுடன் லூட்டி அடிக்கும் தொகுப்பாளர் ரக்சன் - வைரல் வீடியோ!
குக் வித் கோமாளிகளுடன் லூட்டி அடிக்கும் தொகுப்பாளர் ரக்சன் - வைரல் வீடியோ!
குக் வித் கோமாளிகளுடன் லூட்டி அடிக்கும் தொகுப்பாளர் ரக்சன் – வைரல் வீடியோ!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் இரு சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் மூன்றாவது சீசனும் வெற்றி பாதையில் நகர்கிறது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தொகுப்பாளரான ரக்சன் செய்த சாகசம் மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக குக்கு வித் கோமாளி தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலே ரசிகர் பட்டாளத்தை குவித்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு சேரும். மேலும் சீசன் 1 வெற்றி கொடுத்தது போலவே சீசன் 2 ம் குக் மற்றும் கோமாளிகளால் மெகா ஹிட் பெற்று தற்போது சீசன் 3 வெற்றி பாதையில் நகர்கிறது. விஜய் டீவியை பொறுத்தவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை தொடங்கி தொகுப்பாளர் வரை அனைவரையுமே பிரபலமாக்குவதை தான் கடமையாக செய்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை காவ்யாவிற்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன மீனா!

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 1,2,3 என மூன்றையும் தொகுத்து வழங்கும் ரக்ஷன் அவர்கள் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அதே நிகழ்ச்சியின் சீசன் 6 மற்றும் 7 ம் ரக்‌ஷன் தான் தொகுத்து வழங்கினார். மேலும், KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார். இவர் வெள்ளித்திரையில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குக் வித் கோமாளி அனைத்து சீசனிலும் எல்லாருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது போல் தொகுப்பாளர் ரக்ஷன் அவர்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் குக் மற்றும் கோமாளிகளுடன் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டிகள் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ரக்‌ஷன் பைக்கில் ஸ்டண்ட் செய்து அசத்தியுள்ளார். ஆந்த விடியோவை ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ள நிலையில், வீடியோ அதிக லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!