SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரக்ஷா பந்தன் சிறப்பு தள்ளுபடி!

0
SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரக்ஷா பந்தன் சிறப்பு தள்ளுபடி!
SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரக்ஷா பந்தன் சிறப்பு தள்ளுபடி!
SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரக்ஷா பந்தன் சிறப்பு தள்ளுபடி!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பேங்கிங் செயல்பாடுகளான யோனோ செயலி மூலம் ஃபெர்ன்ஸ் N பெட்டல்ஸ் சேவைகளை பயன்படுத்தி, ரக்ஷா பந்தன் பரிசுகளை பெற்றுக்கொண்டால் 20% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தள்ளுபடி:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நிறுவனம் சில முக்கியமான நாட்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, SBI வங்கியின் வாடிக்கையாளர்களின் வீட்டு கடனுக்கான வட்டியை குறைப்பதாக சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டுமாக ரக்ஷா பந்தன் சிறப்பு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவொரு தள்ளுபடி சலுகைகளை அளிப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி கட்டாயம் – அரசு அறிவிப்பு!

அந்த வகையில் ரக்ஷா பந்தன் நாட்களில் SBI நெட் பேங்கிங் மூலம் ராக்கி உள்ளிட்ட சில பரிசுகளை வாங்குபவர்களுக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட உள்ளன. அதாவது SBI வாடிக்கையாளர்கள், யோனோ SBI சேவைகளை பயன்படுத்தி ஃபெர்ன்ஸ் N பெட்டல்ஸிலிருந்து பரிசுகளை வாங்குவதன் மூலம் ரூ.999 வரை 20% தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடியைப் பெற முதலில் வாடிக்கையாளர்கள் SBI யோனோ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதிகாரப்பூர்வ எஸ்பிஐ யோனோ இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பான SBI ட்வீட்டில், ‘ரக்ஷா பந்தனை SBI வங்கியின் பெரிய சலுகையுடன் கொண்டாடுங்கள். ஃபெர்ன்ஸ் N பெட்டல்களில் ஷாப்பிங் செய்து, YONO SBI மூலம் ரூ.999 வரை 20% தள்ளுபடியை பெறுங்கள். அதற்காக YONO SBI பயன்பாட்டை இப்போது பதிவிறக்கவும்’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் SBI வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 22 வரை இந்த தள்ளுபடியை பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக பயனர்கள் ‘SBI20’ குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த சலுகை ‘ரக்ஷா பந்தன்’ பிரிவில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!