விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கத்தி – ரசிகர்கள் உற்சாகம் !

0
விஜய் டிவி
விஜய் டிவி "நாம் இருவர் நமக்கு இருவர் 2" சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கத்தி - ரசிகர்கள் உற்சகம்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கத்தி – ரசிகர்கள் உற்சாகம் !

விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்த ராஜு, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகர் ராஜு:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ள நிலையில், சில முக்கிய சீரியல் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அந்த வகையில் பிரபலமான சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருக்கிறது. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அரண்மனை கிளி சீரியலில் நடித்த மோனிஷா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரமான கத்தியாக பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு நடித்து வந்தார்.

சீல் வைத்து இழுத்து மூடப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை, கதறும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின் கத்தி கதாபாத்திரம் வெளிநாடு சென்றது போல காட்டப்பட்டு வருகிறது. அவர் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கத்தி இல்லாமல் அவரது மனைவி காயத்ரி வருத்தப்படுவது போல காட்டப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ராஜு மீண்டும் கத்தியாக ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் ராஜு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க போவதில்லை எனவும் அடுத்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் அவரை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!