விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் இருந்து விலகும் ராஜு – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற ராஜு, தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து விலக இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸ் ராஜு:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 105 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களின் ஒருவராக களமிறங்கிய ராஜு மக்கள் மனம் கவர்ந்து டைட்டில் வென்றார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சம்பளத் தொகை மொத்தம் ரூ.71 லட்சத்துடன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சீசன் பிரம்மாண்ட வெற்றி அடைய ராஜு பிரியங்கா காமெடி முக்கியமாக இருந்தது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டாடி வருகின்றனர். பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவும் அண்ணாச்சியை சந்தித்து கேக் வெட்டி கொண்டாடினார். அதனை தொடர்ந்து பல ஊடங்கங்களில் அவர் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் இனிமேல் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் ஒன்றை சொல்லி இருக்கிறார்.
கண்ணம்மாவுக்கு பாரதி விதிக்கும் நிபந்தனை என்ன? ரசிகர்களின் கேள்வியால் நொந்து போன நடிகர் அருண்!
எனக்கு அடையாளம் கொடுத்ததே அந்த சீரியல் தான். ஆனால் இதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு போக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதனால் பல பட வாய்ப்புகள் வருகிறது. அதில் கவனம் செலுத்த வேண்டும் என நான் நினைக்கிறன் என சொல்லி இருக்கிறார். அதனால் சீரியலில் கத்தி கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் ராஜூவை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.