அரசியல் களத்தில் மீண்டும் ரஜினிகாந்த்? இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை!

0
அரசியல் களத்தில் மீண்டும் ரஜினிகாந்த்? இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை!
அரசியல் களத்தில் மீண்டும் ரஜினிகாந்த்? இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை!
அரசியல் களத்தில் மீண்டும் ரஜினிகாந்த்? இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை!

கடந்த சில வருடங்களாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், இன்று அரசியலுக்கு வருவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை:

தமிழக கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களத்தில் பல அதிரடி மாற்றங்களும் நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இது குறித்து ரஜினிகாந்த் முடிவு ஏதும் அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் நிச்சயம் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தார்.

வார இறுதி ஊரடங்கு மேலும் 3 மாவட்டங்களில் ரத்து – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!

ஆனால் பல மாதங்களாக அரசியல் கட்சி குறித்து எந்த தகவலும் அறிவிக்காமல் இருந்தார். தொடர்ந்து ரசிகர்களின் வலியுறுத்தலின் பேரில் 2020 டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் ஆரம்பிக்கும் அரசியல் கட்சியினை பற்றிய விவரங்களை வெளியிடுவதாக கூறினார். ஆனால் அப்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக கடந்த 2021 ஜனவரி 11ம் தேதி அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் அமெரிக்கா சென்று பரிசோதனைகளை முடித்து விட்டு திரும்பியுள்ளார். முன்னதாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஜூலை 12ம் தேதி சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க அவர் புறப்படுவதற்கு முன்னதாக பேட்டி அளித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை பல காரணங்களினால் பல காலமாக சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், மக்கள் மன்றத்தின் பணிகள் குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. மேலும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளது. இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here