ரஜினியின் ‘அண்ணாத்த’ உடன் மோதும் ‘தல’ யின் ‘வலிமை’ – புதிய தகவல்!

0
ரஜினியின் 'அண்ணாத்த' உடன் மோதும் 'தல' யின் 'வலிமை' - புதிய தகவல்!
ரஜினியின் 'அண்ணாத்த' உடன் மோதும் 'தல' யின் 'வலிமை' - புதிய தகவல்!
ரஜினியின் ‘அண்ணாத்த’ உடன் மோதும் ‘தல’ யின் ‘வலிமை’ – புதிய தகவல்!

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிய உள்ள நிலையில், இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை ரிலீஸ்:

’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. வலிமை படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் படப்பிடிப்பு தொடங்கிய பல மாதங்களாக வெளிவராமல் இருந்தது.

மனநல மருத்துவருடன் மீரா மிதுன் ! இப்படி பண்றீங்களேம்மா ! Meera Mithun Arresting Video

இதனால் வலிமை படத்தின் அப்டேட் குறித்து ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதிக கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த வாரம் ‘நாங்க வேற மாறி’ என்ற முதல் பாடலும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. தல யின் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், வரும் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடக்க உள்ளது.

TN Job “FB  Group” Join Now

வலிமை படத்தை விரைவில் முடித்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தல 4 வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது, ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் தல யின் ‘வலிமை’ இரண்டும் நேரடியாக தீபாவளி ரிலீஸில் மோதுகின்றது. இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!