தாலி கட்டும் நேரத்தில் வந்து திருமணத்தை நிறுத்திய விக்கி – பார்வதியின் நிலை? ‘ராஜா ராணி 2’ அடுத்த ட்விஸ்ட்!

0
தாலி கட்டும் நேரத்தில் வந்து திருமணத்தை நிறுத்திய விக்கி -
தாலி கட்டும் நேரத்தில் வந்து திருமணத்தை நிறுத்திய விக்கி -

தாலி கட்டும் நேரத்தில் வந்து திருமணத்தை நிறுத்திய விக்கி – பார்வதியின் நிலை? ‘ராஜா ராணி 2’ அடுத்த ட்விஸ்ட்!

பார்வதிக்கு திருமணம் நடைபெறுமா என எதிர்பார்த்த சமயத்தில் விக்கி கடைசி நேரத்தில் வந்து திருமணத்தை நிறுத்துவது போலவும், இருவரும் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பார்வதிக்கு திருமணம் நடைபெறுமா அல்லது கடைசி நேரத்தில் விக்கி ஏதேனும் குழப்பம் செய்து திருமணத்தை நிறுத்த போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விக்கி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்தவுடன் பார்வதி விக்கியை விட்டு விலக நினைக்கிறார். பின்பு, வீட்டில் பார்க்கும் பாஸ்கரை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறார்.

ஆனால், விக்கி விடுவதாக இல்லை. எப்படியாவது பாஸ்கர் மற்றும் பார்வதியின் திருமணத்தை நிறுத்தியே தீரவேண்டும் என நினைக்கிறார். திருமண நாள் நெருங்க நெருங்க பார்வதிக்கு பயம் வருகிறது. சந்தியாவும் சரவணனும் முழுக்க முழுக்க பார்வதிக்கு துணையாக நிற்கின்றனர். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என தைரியம் கூறுகின்றனர். ஆனாலும், மணமேடையில் நீ இருக்கும் போது காதலிக்கும் போது நாம் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டி குடும்பத்தையே அசிங்கப்படுவேன் என கூறுகிறார்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் அசிங்கப்படுவதற்கு நாம் செத்துவிடலாம் என நினைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். அப்போதும் சந்தியா தான் பார்வதியை காப்பாற்றுகிறார். அனைத்து தடைகளையும் தாண்டி மணமேடை வரை வந்து சரியாக தாலி கட்டும் நேரத்தில் விக்கி அங்கு வந்து பார்வதியின் திருமணத்தை நிறுத்துகிறார். மேலும், காதலிக்கும் போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டுகிறார். உடனே,பாஸ்கரின் அம்மா கோவமாகி விக்கியை ஓங்கி கன்னத்தில் அறை விடுகிறார். எங்களது குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் ஏற்கனவே இந்த உண்மை தெரியும். சந்தியா அனைத்து உண்மைகளையும் எங்களிடம் கூறிவிட்டாள் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here