
சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப திட்டமிடும் சரவணன், நிச்சயத்தை நிறுத்த திட்டமிடும் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியலில், சந்தியாவை தனது தோழி வீட்டிற்கு அனுப்ப சரவணன் ஏற்பாடு செய்கிறார். பின்னர் நிச்சயதார்த்தத்திற்கான அலங்கார ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அர்ச்சனா சூடான டீயை பார்வதியின் மூஞ்சியில் கொட்டி நிச்சயத்தை நிறுத்த பார்க்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” எபிசோடில் மயிலும், சர்க்கரையும் விளையாடி கொண்டிருக்கின்றனர். பின்னர் சரவணன் சந்தியாவின் தோழிக்கு போன் செய்து வர சொல்கிறார். அப்போது சரவணன் அப்பா வந்து விடுகிறார். யாரிடம் பேசுனா என கேட்க சந்தியாவின் தோழி அனிதாவிடம் பேசினேன் அவரை கொண்டு போய் அங்கே விட போகிறேன் என சொல்கிறார். அதை கேட்டு சரவணன் அப்பா அதிர்ச்சி அடைகிறார். சந்தியாவிடம் பேசிட்டு முடிவு எடு என சொல்கிறார்.
நீயும் பேசமாட்ட என்னையும் பேசவிட மாட்ட என சொல்கிறார். அதுக்காக இன்றே அனுப்ப போறியா என கேட்க, நீங்க இரண்டு பேரும் ஒன்றாக இருந்து பார்வதி கல்யாணத்தை நடத்த வேண்டும் என சொல்ல, நம்ம வாழ்க்கையை நினைத்து சந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் என சரவணன் சொல்கிறார். சந்தியா தோரணம் கட்டிக் கொண்டிருக்க, கீழே விழ போகிறார். அப்போது சரவணன் அவரை பிடித்துவிடுகிறார். இந்த வேலையெல்லாம் முடித்துவிடுவேன் அடுத்து என்ன வேலை பார்க்க என கேட்கிறார். உங்களுக்கு தெரிந்த வேலை மாட்டும் பார்த்தால் போதும் என சந்தியா சொல்கிறார்.
சந்தியா சரவணனுக்கு உதவி செய்ய, வாழ்க்கை முழுவதும் என்னிடம் கை கோர்த்து வர வேண்டும் என மனதிற்குள் நினைத்து பார்க்கிறார். பின்னர் அர்ச்சனா பார்வதிக்கு வாங்கிய சேலைகளை பார்க்கிறார். அதில் எதுவும் விலை இல்லாமல் இருப்பதை பார்த்த அர்ச்சனா பார்வதி கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறார். சிவகாமி பார்வதிக்கு டீ கொண்டு போய் கொடுக்க சொல்ல அர்ச்சனா கொண்டு செல்கிறார்.
அர்ச்சனாவை அலங்காரம் செய்ய சொல்ல டீயை மூஞ்சியில் கொட்டிவிட திட்டமிடுகிறார். பார்வதி வேண்டாம் என சொல்லி டீயை கொட்டிவிடுகிறார். அது அர்ச்சனா மேலே கொட்டுகிறது. சரவணன் சந்தியாவிடம் உண்மையை சொல்ல போக, சரவணன் வேண்டுமென்றே டீயை கொட்டிக் கொள்கிறார். சரவணன் கை தவறி கீழே கொட்டிவிட்டது என சொல்ல, அப்பாவிடம் சென்று எதுக்கு சொல்கின்றனர் என கேட்கிறார். இரண்டு தரப்பில் கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும் நீ பண்ணுவது ரொம்ப தப்பு என சரவணன் அப்பா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.