குடும்பத்தினர் முன் வண்டி ஓட்டிய சரவணன், லைசன்ஸ் வாங்க சொல்லிக் கொடுக்கும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
குடும்பத்தினர் முன் வண்டி ஓட்டிய சரவணன், லைசன்ஸ் வாங்க சொல்லிக் கொடுக்கும் சந்தியா - இன்றைய
குடும்பத்தினர் முன் வண்டி ஓட்டிய சரவணன், லைசன்ஸ் வாங்க சொல்லிக் கொடுக்கும் சந்தியா - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
குடும்பத்தினர் முன் வண்டி ஓட்டிய சரவணன், லைசன்ஸ் வாங்க சொல்லிக் கொடுக்கும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சிவகாமியை காணாமல் குடும்பத்தினர் அனைவரும் காத்துக் கொண்டிருக்க, சரவணன் செம ஸ்டைலாக வண்டி ஓட்டி வருகிறார். பின் சரவணன் லைசன்ஸ் வாங்க சரவணனிற்கு சொல்லி கொடுக்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் சிவகாமியை அழைத்துக் கொண்டு வண்டியில் செல்ல, குடும்பத்தினர் அனைவரும் சிவகாமியை காணாமல் இருக்கின்றனர். சரவணன் வண்டியில் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார் என்ன ஆனதோ என தெரியாமல் பதட்டத்தில் இருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சரவணன் சிவகாமியை பின்னாடி அமரவைத்து வண்டியை நன்றாக ஓட்டி வருகிறார். அதை பார்த்து குடும்பத்தினர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.

பின் சிவகாமி கோவம் எல்லாம் போய் எல்லாம் உன்னால் தான் நடந்தது என சந்தோஷத்தில் இருக்கிறார். பின் சந்தியாவை இப்படி எல்லாம் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று ஊர் முழுவதும் அசிங்கப்படுத்த கூடாது என சொல்லி சிவகாமி எச்சரிக்கிறார். அப்போது பார்வதி ஆதியை பார்த்து என்ன அண்ணனிற்கு வண்டி ஓட்ட முடியாது என சொன்ன இப்போ என்ன நடந்தது என கேட்கிறார். உடனே அவர் கோவமாக கிளம்புகிறார்.

கயலை கண்ணன் வைத்திருப்பதை பார்த்த மூர்த்தி, சண்டை போடும் மீனா முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் சரவணன் அம்மாவை அழைத்து சென்றதை நினைத்து சந்தோசப்பட, சந்தியா வண்டி ஓட்டினால் மட்டும் போதாது லைசன்ஸ் வாங்க வேண்டும் என சொல்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என சரவணன் கேட்க, சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என சந்தியா சரவணனிற்கு சொல்லி கொடுக்கிறார். சந்தியா அருகில் வந்ததும் சரவணன் தூங்கிவிட சந்தியா அவருக்கு முத்தம் கொடுக்கிறார். பின் ஆதி கோவத்தில் சரவணனின் வண்டியை உடைக்க போக, பார்வதி அந்த நேரம் பார்த்து வந்துவிடுகிறார்.

உடனே ஆதி சமாளித்து பார்வதியை உள்ளே அனுப்ப, மறுநாள் சிவகாமி கடைக்கு கிளம்புகிறார். சரவணன் வண்டி வாங்கினால் போதுமா லைசன்ஸ் வாங்க வேண்டும் என ஆதி மற்றும் செந்தில் கிண்டல் செய்ய, சரவணன் எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறார் என சந்தியா சொல்கிறார். உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை தான் என ஆதி மீண்டும் அசிங்கப்படுத்துவது போல பேச, சந்தியா சில கேள்விகளை கேட்கிறார். ஆதிக்கு அதற்கு பதில் தெரியவில்லை. ஆனால் சரவணன் அதற்கு பதில் சொல்ல, ஆதி அவமானத்தில் இருக்கிறார்.

கோபிக்கு பண உதவி செய்யும் பாக்கியா, மனம் வருந்திய கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆனால் குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷத்தில் இருக்க, சிவகாமி நீ எப்போ இது எல்லாம் கற்றுக் கொண்ட என கேட்டு சந்தோஷத்தில் இருக்கிறார். பின் சிவகாமி லைசன்ஸ் வாங்க வேண்டும் என சொல்ல, இத்தனை நாள் லைசன்ஸ் இல்லாமல் தான் வண்டி ஓட்டினார்களா என கேட்க, ஆமாம் தெரியாமல் செய்துவிட்டார் என சந்தியா சொல்கிறார். பின் சரவணன் லைசன்ஸ் வாங்க கிளம்புகிறார். பின் பார்வதி ஆதியை நீ செய்வது சரி இல்லை என திட்டுகிறார். அதுனால உனக்கு என்ன பிரச்சனை என ஆதி கேட்கிறார்.

அண்ணன் செய்வது சரியா அவர் எப்போ பார்த்தாலும் அண்ணி பேச்சை கேட்கிறார் என ஆதி சொல்ல, பார்வதி அண்ணன் அண்ணி பேச்சை தான் கேட்க வேண்டும் நீயும் கேட்டு தான லாப்டாப் வாங்குன அதில் தான படித்த என கேட்கிறார். அப்போது நீயும் முதலில் அண்ணிக்கு எதிராக தான இருந்த இப்போ என்ன நடந்தது என கேட்க பார்வதி எனக்கு என பேசணும் என்று நினைக்கிறேனோ அதை சொன்னேன் என அங்கிருந்து கிளம்புகிறார். பின் சந்தியா சரவணன் வந்ததும் கண்ணை மூட சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here