
சமையல் சரியாக செய்யாததால் வருத்தப்படும் சரவணன், ஆதரவாக இருக்கும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் போட்டியில் சரியாக சமைக்கவில்லை என நினைத்து வருத்தமாக இருக்கிறார். பின் சந்தியா சரவணன் சரியாக சமைக்காததற்கு என்ன காரணம் என கண்டுபிடிக்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரியாக போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பதால் வருத்தமாக அமர்ந்திருக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் சரவணனனிற்கு ஆறுதல் சொல்கின்றனர். என் அண்ணன் எனக்கு நன்றாக சமைக்கவில்லை என்று சொன்னால் அது நம்புவதாக இல்லை என பார்வதி சொல்ல, அடுத்து என்ன நடைபெறும் என தெரியாமல் சரவணன் இருக்கிறார். அர்ச்சனா அடுத்த போட்டியில் எதற்கு கலந்து கொள்ள வேண்டும் இந்த போட்டியில் சரியாக விளையாடாமல் அசிங்கப்பட்டது போதும் என பேசுகிறார்.
ஜீ தமிழில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல் ‘ரஜினி’ – ப்ரோமோ ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
நீங்க கண்டிப்பாக உங்க திறமையை காட்டுவீங்க என மற்ற போட்டியாளர்கள் சொல்ல, இதையே நினைத்து வருத்தப்பட்டால் அடுத்து உங்களால் போட்டியிட முடியாது, நீங்க நம்பிக்கையோடு அடுத்த சுற்றிற்கு முன்னேற வேண்டும் என சொல்கிறார்.அடுப்பு சூடாகவில்லை என சரவணன் சொல்ல, எல்லா பட்டனை அழுத்திருக்கலாம் என சந்தியா சொல்கிறார். பண்ணேன் ஆனால் எதுவும் சரியாகவில்லை என சரவணன் சொல்கிறார். இனிமேல் எதாவது பிரச்சனை இருந்தால் அவர்களிடம் உடனே சொல்லுங்கள் என சொல்கிறார்.
பின் சந்தியா அடுப்பு பக்கம் சென்று அடுப்பை சோதனை செய்கிறார். அப்போது நடுவர்கள் வர, நீங்க கொடுத்த அடுப்பு வேலை செய்யவில்லை என சொல்கிறார். நீங்களே பாருங்க என அவர் சொல்ல, சந்தியா வயரை எடுத்து பார்க்கிறார். வயர் கட் செய்து இருக்கிறது. நாங்க பார்க்கும் போது எல்லாம் சரியாக தான் இருந்தது என சொல்ல, அடுத்த சுற்று ஆரம்பிப்பதற்குள் இதை பாருங்கள் என சொல்கிறார். யாராவது இதை செய்திருப்பாரா என சந்தியா நினைக்க சரவணன் தைரியமாக இருந்தால் போதும் என சந்தியா நினைக்கிறார்.
கண்ணம்மாவுடன் சந்தோசமாக வாழ தொடங்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’அடுத்து வரும் திருப்பங்கள்!
சந்தியா அண்ணன் போன் செய்து என்ன நடக்குது அங்கே என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல, எல்லாரும் சரியாக செய்ய சரவணனிற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என சந்தியாவின் அண்ணன் கேட்கிறார். இங்கே என்ன நடக்கிறது என எனக்கு சரியாக தெரியவில்லை என சந்தியா சொல்ல, சரவணன் சோகமாக அமர்ந்து யோசனை செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த சந்தியா எப்படியாவது அவரை சிரிக்க வைக்க நினைக்க வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணிடம் லெட்டர் எழுதி கொடுக்கிறார்.
அதை பார்த்து சரவணன் சந்தோசப்பட இருவரும் சேர்ந்து சாப்பிட செல்கின்றனர். அடுத்த கட்ட போட்டி தயாராக போட்டியின் விதிமுறைகளை ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அது புரியாமல் சரவணன் இருக்க, உடனே கோவப்பட்ட சந்தியா போட்டியில் முதலில் தமிழ் ஆங்கிலம் என இரண்டிலும் சொல்ல வேண்டும் என சொல்லி இப்போது அப்படி செய்யாமல் இருக்கீங்க என கேட்கிறார். தமிழில் சொல்ல வேண்டும் என நியாயத்தை தான் கேட்கிறேன் என சொல்ல சரி என சொல்கின்றனர். சிவகாமி அதை நினைத்து சந்தோசப்பட, அடுத்த முறை இப்படி செய்ய கூடாது என நடுவர் எச்சரிக்கை செய்கிறார். நடுவர் செய்த சமையலை வைத்து அதில் போட்டுள்ள 18 பொருள்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அடுத்த சுற்று என சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.