விஜய் டிவி ‘ராஜா ராணி சீசன் 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – நினைவாகும் சந்தியாவின் லட்சியம்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி சீசன் 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - நினைவாகும் சந்தியாவின் லட்சியம்!
விஜய் டிவி 'ராஜா ராணி சீசன் 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - நினைவாகும் சந்தியாவின் லட்சியம்!
விஜய் டிவி ‘ராஜா ராணி சீசன் 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – நினைவாகும் சந்தியாவின் லட்சியம்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சரவணனிற்கு உண்மை எல்லாம் தெரிய வர இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் குடும்பத்தில் பல சண்டைகள் சச்சரவுகள் எல்லாம் நடந்து தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது அதிரடி திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதன் மூலம் சந்தியாவின் வாழ்க்கையே மாற இருக்கிறது. சென்ற வாரம் முழுவதும் அர்ச்சனாவின் உண்மையான முகம் வெளியே வந்து இருக்கிறது. ஆனாலும் சரவணன் அர்ச்சனாவை மன்னித்து வீட்டிற்குள் வர சொன்னதால் சிவகாமி அர்ச்சனாவை வீட்டிற்குள் அனுமதித்து இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய அஞ்சலியாக களமிறங்கும் நடிகை அருள்ஜோதி – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் அர்ச்சனா மாசமாக இருப்பதால் சிவகாமி ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அடுத்து வரும் எபிசோடுகளில் தான் கதை தொடங்கவே இருக்கிறது. அதாவது எதையாவது செய்து சாதிக்க வேண்டும் என்பதே சந்தியாவின் சிறு வயது முதல் ஆசையாக இருக்கிறது. ஆனால் சந்தியா அதை எல்லாம் குடும்பத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்து இருக்கிறார். காலம் நேரம் வரும் போது சரவணனிற்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைக்க சிவகாமியின் மனநிலை காரணமாக அதை எல்லாம் செய்யாமல் இருக்கிறார்.

லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில் இந்த வார எபிசோடு குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணன் சந்தியாவின் வீட்டில் இருக்க, போட்டோகிராபர் ஒருவர் போட்டோ ஒன்றை கொண்டு வந்து கொடுக்கிறார். அதில் சந்தியாவின் அப்பா அம்மா போட்டோவை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் சந்தியாவின் அப்பா அம்மாவை காப்பாற்ற நினைத்தது எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. அது பற்றி சரவணன் தனது அப்பாவிடம் பேச சந்தியாவிற்கு உனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது அவளுடைய கனவு என்ன என்பதை கேட்டு நீ நினைவாக்க வேண்டும் என சுந்தரம் சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here