எந்த பிரச்சனையும் இன்றி நடந்து முடிந்த பார்வதி, பாஸ்கர் திருமணம் – வைரலாகும் “ராஜா ராணி 2” சீரியல் புகைப்படங்கள்!
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான “ராஜா ராணி 2″ல் தற்போது அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. பார்வதி திருமணத்தை தடுக்க விக்கி பல வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் பார்வதி திருமணம் நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க திருமண கோலத்தில் பார்வதி இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் கூட பெண்கள் தங்களது இலட்சியத்தை விட கூடாது என்ற நல்ல கருத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமே சித்து ஆலியா ஜோடி தான் என இருந்தது. அதன் பின் ஆலியா சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக நடிகை ரியா நடித்து வந்தார். ரியா சந்தியா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
பாக்கியாவை தொழில் தொடங்க சொன்ன கோபி, மகிழ்ச்சியில் ராதிகா – இன்றைய எபிசோட்!
இந்நிலையில் தற்போது பார்வதியின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சரவணனும் சந்தியாவும் சேர்ந்து பார்வதியை விக்கியிடம் இருந்து காப்பாற்ற போராடி வருகின்றனர். பாஸ்கரிடம் எல்லா உண்மையும் சொல்லி அவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் விக்கி பல விதங்களில் பார்வதியை தொல்லை செய்கிறார். ஒரே ஒரு நாள் என்னுடன் இருந்து விட்டால் உன்னை நான் விட்டு விடுவேன் என சொல்லி பார்வதியை பிளாக்மெயில் செய்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் பார்வதிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. சந்தியாவும் சரவணனும் நாங்கள் உன்னுடன் இருக்கிறோம் நீ தைரியமாக இருக்க வேண்டும் என அறிவுரை சொல்லி வருகின்றனர். பார்வதிக்கு திருமணப் பட்டு எடுக்க போக அங்கேயும் விக்கி பல சதி வேலைகளை செய்கிறார். அதனால் பார்வதி பாஸ்கர் திருமணம் நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் அது குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது பார்வதி பாஸ்கர் திருமணம் எந்த பிரச்சனையும் இன்றி முடிந்து விட்டது. இதுக் குறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்வதி – பாஸ்கர் திருமண எபிசோடுகளின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.