சரவணன் உடல்நிலையை அறிந்து போட்டி வேண்டாம் என சொல்லும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
சரவணன் உடல்நிலையை அறிந்து போட்டி வேண்டாம் என சொல்லும் சிவகாமி - இன்றைய
சரவணன் உடல்நிலையை அறிந்து போட்டி வேண்டாம் என சொல்லும் சிவகாமி - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
சரவணன் உடல்நிலையை அறிந்து போட்டி வேண்டாம் என சொல்லும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனிற்கு கை முடியாமல் இருக்கும் நிலையில் அவரை மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என சொல்கிறார். பின் சரவணன் போட்டி பற்றி என்ன நினைக்கிறார் என சந்தியா கேட்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சரவணன் மருத்துவமனையில் இருந்து வர சிவகாமி சந்தியாவிடம் டாக்டர் என்ன சொன்னார் என கேட்கிறார். மற்றவர்களிடம் நீ உண்மையை சொல்லவில்லை ஆனால் என்னிடம் நீ சொல்ல வேண்டும் என சொல்கிறார். சந்தியா உண்மையை சொல்ல, சிவகாமி வருத்தப்படுகிறார். இதற்காக தான் என் புள்ளையை அனுப்பமாட்டேன் என சொன்னேன். அவனுக்கு தோல்வியை தாங்கும் தன்மை இல்லை. அதனால் தான் போட்டி எல்லாம் வேண்டாம் என சொன்னேன் என சொல்ல, உங்க புள்ளையை நீங்க தைரியம் இல்லாமல் தவிப்பதை பார்க்க முடியாமல் இருக்கலாம் ஆனால் என் கணவரை அப்படி பார்க்க என்னால் முடியாது என சந்தியா சொல்கிறார்.

கோபியை பார்த்து வருத்தப்படும் பாக்கியா, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

என்ன சொன்னாலும் இனி சரவணன் போட்டியில் கலந்து கொள்ள விடமாட்டேன் என சிவகாமி சொல்ல அர்ச்சனா சீக்கிரம் வீட்டிற்கு கிளம்புவோம் என சொல்கிறார். பின் சந்தியா சரவணன் தூங்குவதை பார்த்து வருத்தப்படுகிறார். உங்களை இந்த நிலைமையில் பார்க்க எவ்வளவு வருத்தமாக இருக்கிறது என சொல்கிறார். பின் சரவணன் எழுந்திருக்க சந்தியா உங்களுக்கு எதாவது தேவையா என கேட்கிறார். அம்மா எங்கே என கேட்க எல்லாரும் அந்த ரூமில் இருக்காங்க என சொல்கிறார். கொஞ்ச நேரம் வெளியே போவோமா என கேட்க, சரி என சொல்கிறார்.

பின் அர்ச்சனா சந்தோசமாக அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்க சல்மா வருகிறார். அவர் என்ன நடந்தது என கேட்க அர்ச்சனா சரவணனிற்கு கை மரத்து போய்விட்டது என சொல்கிறார். அதனால் சந்தியா அத்தையிடம் திட்டுவாங்கினாள் என சொல்ல, அவள் திட்டு வாங்கியது எனக்கு சந்தோசம் தான் ஆனால் சரவணனிற்கு இப்படி நடந்தது தான் வருத்தமாக இருக்கிறது என சல்மா சொல்கிறார். எனக்கு அவங்க யாரோ தான் ஆனால் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நீங்க எப்படி எல்லாம் பண்றீங்க என கேட்க, அதெல்லாம் அவங்களுக்கு தேவை தான் என அர்ச்சனா சொல்கிறார்.

ரூமில் அர்ச்சனா ஆதி சரவணன் பற்றி பேசிக் கொண்டிருக்க செந்தில் வந்து சரவணனிற்கு ஆதரவாக பேசுகிறார். அவர் அர்ச்சனா தான் வேற வீட்டில் இருந்து வந்தவள் அவளுக்கு புரியாமல் இருக்கலாம் உனக்காக அண்ணா எவ்வளவு செய்திருக்கான் ஆனால் அவனை நீ இப்படி பேசலாமா என கேட்கிறார். பார்வதி அண்ணன் போட்டியில் கட்டாயம் வெற்றி பெறுவார் அப்போது இவர்கள் எப்படி பேசுவார்கள் என பார்க்கலாம் என சொல்ல, அர்ச்சனா அத்தை தான் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என சொன்னதாக சொல்கிறார்.

கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!

சந்தியாவும் சரவணனும் நடந்து சென்று கொண்டிருக்க சரவணன் என் தகுதி இவ்வளவு தான் என சொல்கிறார். பின் சந்தியா சரவணனிடம் தாழ்வு மனப்பான்மையை விடுங்க என சொல்கிறார். எனக்கு தாழ்வுமனப்பான்மை என்று எதுவும் இல்லை. ஆனால் என்னுடைய தகுதி என்ன என்பதை எனக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. அதனால் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என சரவணன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here