விஜய் டிவி “ராஜா ராணி 2” ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

தற்போது அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி 2:

விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்த நிலையில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் பார்க்க ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்த சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஆல்யா மானசா. அவர் முதலில் கலைஞர் டிவி “மானாட மயிலாட” என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா – அதிர்ச்சியில் முல்லை!

அந்த சீரியல் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சய் என்பவரை ஆல்யா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கர்ப்பமாக இருந்த அவருக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். அவரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறார். குழந்தை பிறப்பிற்கு பின் ஒரு வருடம் கழித்து ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா நடிகர் சித்து உடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினார். முதல் சீசன் போல இந்த சீசனும் டாப் இடத்தில் இருக்கிறது.

சர்ச்சையில் குக் வித் கோமாளி சீசன் 3 | ‘என்னுடைய நெகட்டிவ் தான் தெரிகிறது’ – வித்யூலேகா ஓபன் டாக்!

இந்நிலையில் அவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ.13,000 வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிக்கும் சித்துவிற்கு ரூ. 10000 வழங்கப்பட்டுள்ளது. பிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அதைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. அதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்து கொண்டே தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!