விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – சரவணனுடன் புதிய பைக் ஓட்டும் சந்தியா!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் - சரவணனுடன் புதிய பைக் ஓட்டும் சந்தியா!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – சரவணனுடன் புதிய பைக் ஓட்டும் சந்தியா!

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் புதிதாக பைக் வாங்க திட்டமிட்டு வரும் நிலையில், அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த வீடியோ ஒன்றை அந்த சீரியலில் சந்தியாவாக நடிக்கும் ஆலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி 2:

விஜய் தொலைக்காட்சி ‘ராஜா ராணி 2’ சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் சரவணனாக சித்து மற்றும் சந்தியாவாக ஆலியா மானசா நடித்து வருகிறார். இருவரும் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு அதன் பின் காதலிக்க தொடங்கி உள்ளனர். நன்றாக படித்த பெண்ணான சந்தியாவின் ஐபிஎஸ் கனவை கணவனான சரவணன் நிறைவேற்றுவாரா என்பது தற்போதைய கதையாக இருக்கிறது.

விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் 10 போட்டியாளர்கள் முழு விபரம் – ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த சில நாட்களாக சண்டையும் சச்சரவுமாக சென்ற இந்த சீரியல் தற்போது ரொமான்ஸ் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. மேலும் சரவணன் ரோட்டில் இருவர் பைக்கில் ஒன்றாக செல்வதை பார்த்து புதிதாக பைக் வாங்க திட்டமிடுகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் புதிய பைக்கை சந்தியா ஓட்டுகிறார். பின்னால் சரவணன் அமர்ந்து செல்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகிலன் ரீஎன்ட்ரி? வெண்பாவுடன் ஜோடி போட்ட பாரதி – வெளியான புகைப்படம்!

இந்த சீன் எப்போது வரும் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்றைய எபிசோடில் சரவணன் குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்ல திட்டமிடுகிறார். அதை கேட்டு சிவகாமி சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும் பார்வதியை பழி வாங்க விக்கி பாஸ்கருக்கு பண உதவி செய்கிறார். இதனால் பார்வதியின் திருமணத்திற்கு ஏதாவது ஆபத்து வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சந்தியா ஐபிஎஸ் கனவை சரவணனிடம் சொல்வாரா? அதை சரவணன் ஏற்றுக் கொள்வாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!