‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த ஆலியா மானஸா – குடும்பத்துடன் கோவா விசிட்! வைரலாகும் வீடியோ!

0
'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த ஆலியா மானஸா - குடும்பத்துடன் கோவா விசிட்! வைரலாகும் வீடியோ!
'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த ஆலியா மானஸா - குடும்பத்துடன் கோவா விசிட்! வைரலாகும் வீடியோ!
‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த ஆலியா மானஸா – குடும்பத்துடன் கோவா விசிட்! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸா சீரியலில் இருந்து கிடைத்துள்ள சிறிய பிரேக்கை தனது குடும்பத்தாருடன் கோவா சென்று உற்சாகமாக செலவிட்டு வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலியா மானஸா

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆலியா மானஸா. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு, ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ஆலியா மானஸா ரசிகர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறார். இவரது குழந்தைத்தனமான பேச்சும், வெகுளித்தனமும் ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை திறப்பு விழாவுக்கு தயாராகும் முல்லை & கதிர் – அடுத்தகட்ட கதைக்களம்!

இப்படி இருக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஆலியா மானஸாவுக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது 2வது முறை கர்ப்பமாகி இருக்கிறார். அந்த வகையில் முதல் குழந்தையின் பிறப்புக்கு பின்பாக உடல் எடை அதிகரித்த ஆலியா ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிப்பதற்காக பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் ஸ்லிம் ஆனார்.

தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த ஆலியா மானஸா 2வது முறை கர்ப்பமாக இவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியானது. ஆனால் எந்த காரணத்தாலும் ‘ராஜா ராணி 2’ தொடரில் இருந்து விலக மாட்டேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஆலியா. அந்த வகையில் தற்போது 8வது மாத கர்ப்பத்தை கொண்டாடி வரும் நடிகை ஆலியா, சீரியலில் இருந்து கிடைத்துள்ள பிரேக்கை தனது குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று உற்சாகமாக செலவிட்டு வருகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் எழில் யார் தெரியுமா? ரசிகர்களை வியக்க வைக்கும் தகவல்கள்!

இது தொடர்பாக ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கோவா விசிட், ட்ராவல், ஐலா பாப்பாவின் செல்ல சேட்டைகள், ரெஸ்டாரண்ட் உணவு, கடற்கரை என பல விஷயங்கள் இடம்பிடிக்க அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஐலா பாப்பா செய்யும் குட்டி குட்டி சேட்டைகள், மழலை பேச்சுக்கள் அனைத்தும் வழக்கம் போல ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here