சந்தியாவை வீடு தேடி வந்து வாழ்த்திய போலீஸ், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
சந்தியாவை வீடு தேடி வந்து வாழ்த்திய போலீஸ், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
சந்தியாவை வீடு தேடி வந்து வாழ்த்திய போலீஸ், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
சந்தியாவை வீடு தேடி வந்து வாழ்த்திய போலீஸ், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

குற்றவாளிகளை பிடிக்க சந்தியா உதவிய செயல், செய்தித்தாள்களில் வர அதனை கண்டு சிவகாமி என்ன சொல்லுவாரோ என முழு குடும்பமும் பயப்படுகிறது. அப்போது வீடு தேடி வந்து போலீஸார் சந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கையில் சிவகாமியும் சந்தோசப்படுகிறார்.

ராஜா ராணி

சந்தியாவும், சரவணனும் காவல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். எல்லா போலீஸ் அதிகாரிகளும் ஒரே மாதிரி இல்லை, போலீஸ் இல்லன்னா இந்த ஊரு இப்படி அமைதியா இருக்காது என சந்தியா கூற நீங்க படித்தவங்க, அதுனால உங்களுக்கு எல்லாம் தெரியுது என சரவணன் கூறுகிறார். உடனே படிப்பை பத்தி பேசாதீங்க, டாப்பிக்க மாத்துங்க என கூறிவிட்டு நீங்க முன்னம மாதிரி பேசுறதே இல்ல என சந்தியா சொல்லுகிறார்.

லட்சுமியை பார்க்க விடாமல் கண்ணனை தடுக்கும் குடும்பம் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

தேவை இருந்தா பேசுவேன் என சரவணன் சொல்ல கணவன், மனைவின்னா மனசு விட்டு பேசனுங்க, பேச ஏதும் இல்லன்னா பிரண்ட்ஸ் பத்தி, பக்கத்து வீட்ட பத்தி பேசணும், இல்ல புறணியாவது பேசணும் என சந்தியா கூற வீட்டுக்கு போலாம் என சரவணன் கூறுகிறார். இரவு ரூமுக்கு வரும் செந்தில் கீழே பாய் விரித்து படுக்க, அர்ச்சனா கடுப்பாகிறார். பின்னர் அர்ச்சனாவும் கீழே வந்து படுக்க எழுந்து சேரில் அமர்ந்து விடுகிறார் செந்தில். இன்னும் எத்தனை நாள் இப்படியே இருப்பீங்கனு பாக்குறேன் என நினைத்து கொள்கிறார் அர்ச்சனா.

காலையில் சந்தியா அனைவருக்கு பில்டர் காபி போட்டு தர, நன்றாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். பிறகு பேப்பரில் வந்த செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்க, சரவணன், சந்தியா இருவரும் பேப்பரில் வந்திருப்பதாக கூறி அந்த செய்தியை ரவி வாசிக்கிறார். பின்னர் நடந்ததை சந்தியா கூற ரவி வாழ்த்து சொல்லுகிறார். அப்போது இந்த செய்தி தெரிந்தால் சிவகாமி என்ன சொல்லுவாரோ என அனைவரும் பயப்பட அங்கு வரும் செந்தில் பேப்பரை எடுத்து வாசிக்க போகிறார்.

TN Job “FB  Group” Join Now

அவரிடம் இருந்து பேப்பரை ரவி சமாளித்து வாங்கி, அதை பிடுங்கி ஆதி படிக்க, அதையும் சரவணன் எடுத்துக்கொள்கிறார். அப்போது வீட்டுக்கு போலீஸ் வருகிறார்கள். இதை பார்த்து சந்தியா என்ன செய்தாலோ என சிவகாமி பயப்பட, குற்றவாளிகளை பிடிக்க சந்தியா உதவி செய்ததாக கூறி போலீசார் வாழ்த்து சொல்கிறார்கள். சந்தியாவை கமிஷனர் அழைத்து வர சொன்னார் என போலீஸ் கூப்பிட சிவகாமி, சந்தியாவை பாராட்டி விட்டு அவர்களுடன் போய் வர சொல்லி அனுப்பி வைக்க மற்ற அனைவரும் சந்தோசப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here