‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசாவிற்கு 2வது பிரசவம் – ஆணா? பெண்ணா? ரசிகர்கள் வாழ்த்து!

0
'ராஜா ராணி 2' ஆல்யா மனசாவிற்கு 2வது பிரசவம் - ஆணா? பெண்ணா? ரசிகர்கள் வாழ்த்து!
'ராஜா ராணி 2' ஆல்யா மனசாவிற்கு 2வது பிரசவம் - ஆணா? பெண்ணா? ரசிகர்கள் வாழ்த்து!
‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசாவிற்கு 2வது பிரசவம் – ஆணா? பெண்ணா? ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த சீரியல் கதாநாயகி ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது.

நடிகை ஆல்யா மானசா:

ராஜா ராணி 2 சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. அர்ச்சனா தான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம் என தெரிந்தும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வீட்டிற்குள் சரவணன் அனுமதிக்கிறார். இந்நிலையில் சந்தியாவின் அண்ணன் வெளிநாட்டில் இருந்து வர, அவரை பார்க்க சந்தியாவும் சரவணனும் சென்றிருக்கின்றனர். அப்போது சரவணனிற்கு சந்தியாவின் அப்பா அம்மா யார் என்பது தெரியவர சந்தியாவின் கனவு என்ன என்பதை தெரிந்து சரவணன் அதை நிறைவேற்ற இருக்கிறார்.

BB Ultimate அனல் பறக்கும் விவாதத்தில் அபிராமி & நிரூப் – பதற வைக்கும் ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் சீரியல் கதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்து நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆல்யா மானசா நடித்து வருகிறார். அவர் பிரபல நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு அய்லா என்ற மகள் இருக்கிறாள். இந்த அழகான குடும்பம் சமூக வலைத்தளங்களில் அழகான வீடியோக்களை பகிர்ந்து ட்ரெண்டாகி இருக்கின்றனர்.

“பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அரங்கேறிய கோபி, ராதிகா திருமணம்!

ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியா கதாபாத்திரம் பல சண்டை மற்றும் ஆக்சன் காட்சிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா 9 மாதம் வரை சீரியல் படபிடிப்புகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்க இருப்பதாக அழகான பதிவு ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். அதில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!