மனைவி சந்தியாவை ஐபிஎஸ் ஆக்கிய சரவணன்.. காக்கி உடையில் மாஸ் காட்டும் சந்தியா – ராஜா ராணி 2 ப்ரோமோ!

0
மனைவி சந்தியாவை ஐபிஎஸ் ஆக்கிய சரவணன்.. காக்கி உடையில் மாஸ் காட்டும் சந்தியா - ராஜா ராணி 2 ப்ரோமோ!
மனைவி சந்தியாவை ஐபிஎஸ் ஆக்கிய சரவணன்.. காக்கி உடையில் மாஸ் காட்டும் சந்தியா - ராஜா ராணி 2 ப்ரோமோ!
மனைவி சந்தியாவை ஐபிஎஸ் ஆக்கிய சரவணன்.. காக்கி உடையில் மாஸ் காட்டும் சந்தியா – ராஜா ராணி 2 ப்ரோமோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சிவகாமியின் அனுமதியுடன் சந்தியா, ஐபிஎஸ் பயிற்சிக்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் தனது கணவர் சரவணன் துணையுடன் சந்தியா ஐபிஎஸ் பயிற்சி எடுக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், சந்தியாவின் ஐபிஎஸ் கனவு நினைவாகுமா என்ற எதிர்பார்ப்புடன் கதை சென்று கொண்டிருந்த நிலையில், சரவணனின் 5 லட்சம் பணத்தை எடுத்தது யார் என சந்தியா கண்டுபிடித்தால் அவள் எங்கே வேண்டுமானாலும் ஐபிஎஸ் பயிற்சிக்கு போகலாம் என சிவகாமி சொல்கிறார். சந்தியாவும் போராடி பணத்தை திருடியது ஆதி தான் என கண்டுபிடிக்கிறார். ஆனால் ஆதி சந்தியாவின் காலில் விழுந்து கெஞ்சியதால் சந்தியாவால் உண்மையை சொல்ல முடியவில்லை.

அதனால் சந்தியா பழியை தானே ஏற்றுக் கொள்கிறார். இந்நிலையில் சரவணனிற்கு உண்மை தெரிய வர அவர் சிவகாமியிடம் உண்மையை சொல்கிறார். சந்தியா பணம் எடுத்ததை கண்டுப்பிடித்தது இல்லாமல், குடும்ப மானத்தை காப்பாற்ற பழியை தானே ஏற்றுக் கொள்கிறார். இந்நிலையில், சிவகாமி சந்தியாவை ஐபிஎஸ் பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கிறார். சந்தியா சரவணனுடன் ஐபிஎஸ் பயிற்சிக்கு செல்கிறார். அங்கே பல கடினமான பயிற்சிகளை அவர் செய்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு விடிவுகாலம்.. DNA டெஸ்ட் எடுக்க போகும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

Exams Daily Mobile App Download

சந்தியா எல்லா பயிற்சியிலும் நல்ல முறையில் செய்து முடிக்க அதை சரவணன் பார்த்து சந்தோசப்படுகிறார். இறுதியில் எல்லா பயிற்சிகளையும் முடித்து சந்தியா ஐபிஎஸ் உடையை மாட்டி கெத்தாக இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. தன்னுடைய மனைவியின் கனவை நிறைவேற்றி பெருமையான கணவராக சரவணன் இருப்பது போல அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோ ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!