தியேட்டரில் சண்டையிடும் சந்தியா, கோவப்பட்டு வீட்டுக்கு வந்த சிவகாமி – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடு!

0
தியேட்டரில் சண்டையிடும் சந்தியா, கோவப்பட்டு வீட்டுக்கு வந்த சிவகாமி - இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடு!
தியேட்டரில் சண்டையிடும் சந்தியா, கோவப்பட்டு வீட்டுக்கு வந்த சிவகாமி - இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோடு!
தியேட்டரில் சண்டையிடும் சந்தியா, கோவப்பட்டு வீட்டுக்கு வந்த சிவகாமி – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடு!

குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் சிவகாமி, அங்கு நடைபெறும் சில காட்சிகளை பார்த்து சந்தியா மற்றும் சரவணனை தவறாக புரிந்து கொண்டு கோவப்பட்டு வீட்டுக்கு வருவதாக புதிய எபிசோடுகள் வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி 2

இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடில் பல வருடங்கள் கழித்து தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளதை நினைத்து சிவகாமி சந்தோஷப்படுகிறார். அங்கு தியேட்டரின் வாசலில் நின்று கொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் சிலர் படம் பார்க்க வந்த பெண்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதனை அந்த பெண்களின் அப்பா தட்டி கேட்க அவர்கள் கலாட்டா செய்கிறார்கள். இதை கவனித்த சந்தியா, செருப்பு காலை கடிப்பதாக கூறி காலை கழுவ வேண்டும் என சொல்லிவிட்டு அனைவரையும் உள்ளே அனுப்புகிறார்.

புது கடைக்காக நகைகளை கொடுக்கும் தனம் & மீனா, வருத்தத்தில் முல்லை – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

பிறகு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் அந்த நபர்களிடம் சென்று பேசுகிறார். அவர்கள் சந்தியாவை அடிப்பேன் என சொல்ல, சந்தியா அவர்களை ஓங்கி அடிக்கிறார். அப்போது சந்தியாவுக்காக காத்திருக்கும் குடும்பத்தினர் சந்தியாவை காணவில்லை என தேடுகின்றனர். பிறகு படம் ஆரம்பிக்க, எல்லாரும் உள்ளே செல்கின்றனர். இப்போது சரவணன் சந்தியாவை தேடி வெளியே வர, அவர்களுடன் சேர்ந்து சரவணனும் அவர்களை அடிக்கிறார்.

பிறகு அந்த பெண்களின் அப்பா சந்தியாவை பாராட்டுகிறார். அப்போது தியேட்டர் இருக்கையில் வந்து அமரும் சந்தியா, கண்ணில் தூசி விழுந்து விட்டதாக கூற அதனை சரவணன் ஊதி விடுகிறார். அதை பார்த்த சிவகாமி சந்தியாவை தவறாக நினைத்து கொண்டு கோவப்பட்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகிறார். வீட்டுக்கு வந்ததும் நடந்ததை கூறாமல் பெரிய படிப்பை படிச்சிருக்காங்க, அதுனால இதெல்லாம் அவங்களுக்கு சகஜம் தான் என பொடி வைத்து பேசுகிறார் சிவகாமி.

விவாகரத்து பற்றிய சிந்தனையில் கண்ணம்மா, அஞ்சலியை வற்புறுத்தும் வெண்பா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

நான் என்ன தப்பு செஞ்சேன் என சந்தியா கேட்க, நீ தான் சரவணனுக்கு எதோ சொல்லி அவனை அப்படி செய்ய வைச்ச என சந்தியா மீது கோவப்படுகிறார். அப்போது சந்தியாவுக்கு ஆதரவாக சரவணனின் அப்பா மற்றும் செந்தில் இருவரும் பேசுகிறார்கள். சிவகாமி எதற்காக கோவப்படுகிறார் என்பதை கண்டுபிடித்த சரவணன், சந்தியா கண்ணில் தூசி விழுந்ததாக கூற நீ பொய் சொல்லுகிற என பதில் சொல்லுகிறார் சிவகாமி. ஆனால் தியேட்டரில் வைத்து கொஞ்சுறது, முத்தம் கொடுக்குறது எல்லாம் அசிங்கம் என கூறிவிட்டு சிவகாமி அங்கிருந்து கோவமாக செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here