கர்ப்பமாக இருந்து கொண்டு வீடியோ வெளிட்ட “ராஜா ராணி 2” ஆல்யா மானசா – ரசிகர்கள் வாழ்த்து!

0
கர்ப்பமாக இருந்து கொண்டு வீடியோ வெளிட்ட
கர்ப்பமாக இருந்து கொண்டு வீடியோ வெளிட்ட "ராஜா ராணி 2" ஆல்யா மானசா - ரசிகர்கள் வாழ்த்து!
கர்ப்பமாக இருந்து கொண்டு வீடியோ வெளிட்ட “ராஜா ராணி 2” ஆல்யா மானசா – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில், கர்ப்பகாலத்தில் துள்ளி குதித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை ஆல்யா மானசா:

ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஆல்யா மானசா சஞ்சய் ஜோடி. இருவருக்கும் அய்லா என்ற குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் ஆல்யா மானசா தற்போது விஜய் டிவியில் முன்னணி சீரியலான ராஜா ராணி 2வில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சித்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் ஆக வேண்டும் என கனவுடன் இருக்கும் சந்தியா சரவணனை கல்யாணம் செய்து கஷ்டப்படுவதே கதையாக இருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் புதிய தோற்றம் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

இப்படி ஒரு தைரியமான பெண்ணாக நடித்து வரும் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். தற்போது அவருக்கு நான்கு மாதம் ஆகிறது. தொடர்ந்து அவர் சீரியலில் நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் அதற்கு ஏற்றார் போல கதை அமையும் என அவரது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அவரது மகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கும் நிலையில் அய்லா பாப்பா அக்கா ஆக போகிறாள் என ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.

தனது கணவருக்காக சமைத்து கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் தற்போது ஆல்யா கர்ப்பமாக இருப்பதோடு துள்ளி குதித்து ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்ப்பமாக இருக்கும் அவர் இப்படி ஆக்டிவாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பவே இவருக்கு வயிறு தெரிய தொடங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நன்றாக வயிறு தெரிய தொடங்கும் அதனால் சீரியலில் எந்த மாதிரி மாற்றம் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!