கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” ஆல்யாவிற்கு மாமியார் கொடுத்த பரிசு – ட்ரெண்டான வீடியோ!

0
கர்ப்பமாக இருக்கும்
கர்ப்பமாக இருக்கும் "ராஜா ராணி 2" ஆல்யாவிற்கு மாமியார் கொடுத்த பரிசு - ட்ரெண்டான வீடியோ!
கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” ஆல்யாவிற்கு மாமியார் கொடுத்த பரிசு – ட்ரெண்டான வீடியோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது மாமியார் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ராஜா ராணி 2:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் டாப் சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஐபிஎஸ் ஆகும் கனவுடன் இருக்கும் சந்தியா படிக்காதவரை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுகிறார். அவருடைய கனவை பற்றி சொல்லி தனது இலட்சியத்தை அவர் அடைவாரா என்பதே கதையாக இருக்கிறது. சந்தியா கதாபாத்திரத்தில் ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விடுமுறை எடுத்த ஹீரோ அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் ஆலியா அவருடன் நடித்த சஞ்சய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அய்லா என்ற மகளும் இருக்கிறாள். தனியாக யூடுப் சேனல் நடத்தி வரும் அவர் குழந்தை செய்யும் சுட்டித்தனங்களை வீடியோவாக பதிவிடுவார். சமீபத்தில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அவர் கணவர் சஞ்சய் யூடுப் சேனலில் பதிவிட்டிருந்தார். அதை தொடர்ந்து அவர்களது யூடுப் சேனலிலும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஜோடியாக போட்டோஷூட் நடத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது மாமியார் பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ஆல்யா மகிழ்ச்சியில் நன்றி சொல்கிறார். ஆலியா மாமியார் அவருக்கு ஒரு ஹேர் ஸ்ட்ரைட்னர் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் அழகான அய்லாவிற்கு தங்கச்சி அல்லது தம்பி வருவதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!