சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தோனி குறித்து நினைவு கூறும் கொண்டப்பா ராஜ் பழனி!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - தோனி குறித்து நினைவு கூறும் கொண்டப்பா ராஜ் பழனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - தோனி குறித்து நினைவு கூறும் கொண்டப்பா ராஜ் பழனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தோனி குறித்து நினைவு கூறும் கொண்டப்பா ராஜ் பழனி!

இந்திய அணிக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அவருடன் உரையாடிய சில விஷயங்களை CSK அணியின் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் கொண்டப்பா ராஜ் பழனி பகிர்ந்துள்ளார்.

கொண்டப்பா ராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2022ல் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொண்டிருந்தது. ஏனெனில் IPL வரலாற்றில் CSK அணி இரண்டாவது முறையாக பிளேஆஃப்களுக்கு செல்லத் தவறியது. இதனால் நடப்பு லீக் கட்டத்தை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் முடித்துள்ளனர். இப்போது நான்கு முறை சாம்பியன்களுக்கு இந்த சீசன் பெரிய அளவு கிளிக் ஆகவில்லை என்றாலும் MS தோனி இந்த சீசனில் பேட்டிங் மூலம் சில அசாத்தியங்களை செய்திருந்தார். இதற்கிடையில், சர்வதேச ஓய்வை அறிவித்த பிறகு தோனியுடன் உரையாடிய கதையை CSK அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் கொண்டப்பா ராஜ் பழனி நினைவு கூர்ந்துள்ளார்.

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இது குறித்து அவர் கூறும் போது, ‘தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் சென்னை அணியின் முகாம் தொடங்கியது. அப்போது தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். நீங்கள் பந்து வீசுபவர்களா என்று கேட்டார். பிறகு அவரை நோக்கி பந்து வீசச் சொன்னார். அதன் பிறகு அணியினர் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து தோனியின் ஓய்வு பற்றி நெட் பவுலர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அடுத்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு, அவர் சைடு ஆர்ம் விளையாட வந்தார்.

Exams Daily Mobile App Download

அப்போது ஃப்ளெமிங், ஹஸ்ஸி மற்றும் அனைவரும் தோனி வருவதாகச் சொன்னார்கள். என்னை கவனமாக பந்துவீச சொன்னார்கள். முதல் இரண்டு பந்துகள் வைடுகளாக இருந்தன. அடுத்த பந்து ஃபுல் டாஸ். தோனி என்னிடம் வந்து என்னைப் பார்த்து பந்து வீசுவதை நிறுத்துங்கள் என்றார். பிறகு அவர் என்னிடம் இயற்கையாக விளையாட வேண்டும் என்று சொன்னார். நான் அவர் விரும்பும் இடத்தில் பந்து வீச ஆரம்பித்தேன். பின்னர் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் ஒவ்வொரு நாளும் என் பெயரைச் சொல்லி என்னிடம் பேசத் தொடங்கினார்’ என்று கூறி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here