பாரத் கவுரவ் ரயில்களின் கட்டணம் குறைவு – வெளியாக இருக்கும் சூப்பரான அறிவிப்பு!
இந்தியாவில் மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் வசூலிக்கப்படும் பயணச்சீட்டு கட்டணம் அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள். அதனால் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டணம் குறைவு
நாட்டில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர். மேலும் இதில் குறைவான கட்டணம் வசூலிப்பதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ரயில்வே துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதே போன்று பாரத் கௌரவ் சிறப்பு ஸ்ரீ ஜெகநாத் யாத்ரா ரயில் மற்றும் ராமாயண சர்க்யூட் பாரத் கௌரவ் ரயில் உள்ளிட்ட ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் குறைவாக பயணிகள் பயணித்து வந்ததால் இந்த 2 ரயில்களும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாரத் கௌரவ் ரயிலில் 18 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கு ஒரு பயணிக்கு ரூ.62,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாரத் தர்ஷன் ரயிலில் இந்த கட்டணத்தை விட மிகக்குறைவாக வசூலிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கையால் அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரக்ஞானந்தா – குவியும் பாராட்டுக்கள்!
Follow our Instagram for more Latest Updates
அதனால் பாரத் கௌரவ் ரயிலின் டிக்கெட் கட்டணத்தை 20% வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.