ரயில்வே பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் – நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு!
ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள Chittaranjan Locomotive Works (CLW) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. PGT, PRT ஆகிய பணிகளுக்கு என ரயில்வே பள்ளிகளில் ஒன்றான Chittaranjan High School-ல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Chittaranjan High School (CLW / Railway School) |
பணியின் பெயர் | PGT, PRT |
பணியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2023 to 24.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
ரயில்வே பள்ளி பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, PGT பணிக்கு 16 பணியிடங்களும், PRT பணிக்கு 03 பணியிடங்களும் Chittaranjan High School-ல் காலியாக உள்ளது.
PGT / PRT கல்வி:
இந்த ரயில்வே பள்ளி சார்ந்த பணிகளுக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BCA, B.Ed, MCA, Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
PGT / PRT வயது:
01.09.2023 அன்றைய தினத்தின் படி, 65 வயதுக்கு மேற்படாத நபர்கள் மட்டுமே இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இயலும்.
PGT / PRT ஊதியம்:
- PGT பணிக்கு ரூ.27,500/- என்றும்,
- PRT பணிக்கு ரூ.21,500/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
PGT / PRT பணிக்கு தேர்வு செய்யும் விதம்:
இந்த ரயில்வே பள்ளி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் 22.11.2023 அன்று முதல் 24.11.2023 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
PGT / PRT பணிக்கு விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து நேர்காணலின் போது காலை 9.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.