தீபாவளிக்கு பிறகு ரயில் பயணத்தில் சிக்கல் – காரணம் இது தான்!
இந்திய ரயில்வே துறை ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களும் அரங்கேறி வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது ரயில்வே துறையில் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
IND vs SA: இந்திய அணி சூப்பர் பேட்டிங்.. வெற்றி யாருக்கு??
ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வாக்கெடுப்பு நடத்த உள்ளனர். இந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.